Skip to main content

மோடி, ராகுல் இல்லாமல் இவர்களுக்கும் பிரதமராகும் வாய்ப்பு?

Published on 29/04/2019 | Edited on 29/04/2019

இந்தியாவில் பல்வேறு கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த பாராளுமன்ற தொகுதிகளிலும் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தொகுதிகளிலும் தொங்கு பாராளுமன்றம் அமைவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என கருத்துக்கணிப்பில் கூறிவருகின்றனர். எப்படியென்றால் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைய போதுமான சீட் பெறாமல் விட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்று கேள்வி வரும். அப்போது மாநில கட்சிகள் ஒரு குறிப்பிட்ட அளவு சீட்கள் வெற்றி பெற்றால் அந்தக் கட்சிகள் யாருடன் கூட்டணி வைக்கிறார்களோ அல்லது ஆதரவு தருகிறார்களோ அவர்களே பிரதமராக வாய்ப்பு அதிகமாக உள்ளது . 


 

ragul modi



மேலும் அந்த மாநில கட்சிகள் ஒரு சில நிபந்தனைகளுடன் ஏதாவது ஒரு முக்கிய கட்சிக்கு ஆதரவு கொடுத்தால் அந்த மாநில கட்சிகளின் தலைவர்களில் ஒருவர் பிரதமராக வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது. இந்த நிலையில் உத்திர பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கு தேச கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு ஆகிய மூவருக்கும் பிரதமராக வரக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். கர்நாடகாவில் நடைபெற்ற மாநில தேர்தலில் பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் தனி பெரும்பான்மை பெறாத போது குமாரசாமி காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் முதல்வரானது குறிப்படத்தக்கது. இதே மாதிரி சூழ்நிலை மத்தியில் வந்தால் மாநில கட்சியின் தலைவர்களில் ஒருவர் பிரதமராக வாய்ப்பு உள்ளது. இப்பொழுது வரை காங்கிரஸ் கட்சியினரும் ராகுல் காந்திதான் அடுத்த பிரதமர் என்று வெளிப்படையாகக் கூறவில்லை தேர்தல் முடிந்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று கூறிவருகின்றனர்.  

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.