Skip to main content

கரோனா தடுப்பூசி செலுத்துவதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடம் - மத்திய அரசு தகவல்!

Published on 13/05/2021 | Edited on 13/05/2021
ர


இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. மராட்டியத்தில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மராட்டியத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்து வருகிறது. உயிரிழப்புக்களும் அதிக எண்ணிக்கையில் இருந்து வருகிறது.

 

பாதிப்பு எண்ணிக்கை தினமும் 50 ஆயிரத்துக்குக் குறையாமல் பல வாரங்களாக இருந்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தடுப்பூசி செலுத்துவதில் முதலிடத்தில் உள்ளதாகவும், இதுவரை அங்கு 1.89 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்