Skip to main content

பண்ணை வீட்டில் ரஜினி தியானம்! 

Published on 19/06/2020 | Edited on 19/06/2020
Rajinikanth

 

பொது முடக்கத்தால் அரசியல் பிரமுகர்களும் திரைத்துறை பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்! வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர்கள், தங்களின் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவதுடன் பயனுள்ள வகையில் நேரத்தை வடிவமைத்துக் கொள்கின்றனர்.  

ரஜினி என்ன செய்கிறார் என சில தகவல்கள் நமக்கு கிடைத்தன. போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டிலிருந்து காலை 11 மணிக்கு வெளியே புறப்படும் ரஜினி, பழைய மாமல்லபுரம் சாலையில் இருக்கும் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்குச் செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிடுகிறார். அதன் பிறகு 4 மணி வரை உலக அளவில் புகழ் பெற்ற புத்தகங்களை வாசிக்கிறார். அதில் உள்ள முக்கிய விஷயங்களை அடிகோடிட்டு வைக்கிறார் ரஜினி. 

மாலையில் பண்ணையை சுற்றி நடைப்பயிற்சி, அதன் பிறகு அரை மணி நேரம் தியானம், இதனையடுத்து மூச்சு பயிற்சி எடுத்துக் கொள்கிறார் ரஜினி. முக்கியமான சிலரிடம் ஃபோனில் அலாவுலாவுகிற ரஜினி, நடப்பு அரசியல் குறித்தும் விவாதிக்கிறார். அதனையடுத்து, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து விட்டு, இரவு 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டன் இல்லத்திற்கு வந்து விடுகிறார் ரஜினி. கடந்த இரு மாதங்களாகவே ரஜினி தனது பகல் நேரத்தை இப்படித்தான் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள் அவரது குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஜனநாயக கடமையாற்றினார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Actor Rajinikanth cast his vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.