Published on 05/03/2020 | Edited on 05/03/2020
தமிழகத்தில் கரோனா பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் எழுதியுள்ள கடிதத்தில், "அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும். கரோனா குறித்து கிராமங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட வாரியாக அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை அமைத்து ஆலோசிக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், உணவகங்கள், வணிக வளாகங்களில் கைகளைக் கழுவ கிருமி நாசினியை கட்டாயம் வைக்க வேண்டும்." இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.