Skip to main content

வாக்கி டாக்கி ஊழல் புகார் எதிரொலி... உயர் காவல் அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

 

காவல்துறைக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, உயர் காவல்துறை அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் முப்பது இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

 

wacky tacky



கடந்த 2016 ஆண்டுகளில் காவல்துறை தொழில்நுட்ப பிரிவுக்கு வாங்கப்பட்ட உபகரணங்களில் ஊழல் புகார் எழுந்தது. ஊழல் நடந்ததாக கூறப்படும் காலத்தில் பதவி வகித்த உள்துறை செயலர் நிரஞ்சன் மார்டின், தமிழக காவல்துறை தலைவர் (டி.ஜி.பி) யாக பதவி வகித்த காலகட்டத்தில், காவல்துறைக்கு தொழில்நுட்ப பிரிவுக்கு வாங்கப்பட்ட வாக்கி டாக்கி 80 கோடிருபாய்க்கு, 4 ஆயிரம் வாக்கி டாக்கி மட்டும் வாங்கப்பட்டது.
 

ஆனால் 44 கோடியில் பத்தாயிரம் வாக்கி டாக்கி வாங்கலாம் என்ற நிலையில் ஏன் அதிக பணம் கொடுத்து குறைவாக வாக்கி டாக்கி வாங்கப்பட்டது என்ற புகார் எழுந்தது. இந்தநிலையில் காவல்துறை தொழில்நுட்ப பிரிவுக்கு வாங்கப்பட்ட உபகரணங்கள் டெண்டரில் சுமார் 350 கோடி ரூபாய் ஊழல் முறைகேடு நடந்துள்ளதாக, சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் தொரிவித்தார்.


 

ஸ்டாலின் கூறியது தவறான செய்தி என்றும் ஆதாரம் அற்ற செய்தி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம்  தெரிவித்தார். இந்தநிலையில் இன்று லஞ்ச ஒழிப்புதுறை போலீஸ்சார் அந்த புகார் எழுந்த காலத்தில் காவல்துறை தலைமையகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியில் இருந்த காவல்துறை தலைமையகம் எஸ்.பி. அன்புசெழியன்க்கு சொந்தமான பத்து இடங்களிலும், ஏ.டி.எஸ்.பி உதயசங்கர் மற்றும் கூடுதல் எஸ்.பி. ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான சென்னை எம்.ஆர்.சி.  நகரில் உள்ள வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இருபது இடங்கள் என் மொத்தம் முப்பது இடங்களில், சுமார் நூறு லஞ்ச ஒழிப்பு போலீஸ்சார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காவல்துறை வட்டாரங்களில் பரபரப்பாக உள்ளது.
 


 

 

சார்ந்த செய்திகள்