Skip to main content

ஓட்டு போடப்போகும்போது இதையெல்லாம் செய்யாதீர்கள்...

Published on 17/04/2019 | Edited on 17/04/2019

நாளை தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதற்காக அனைவரும் தயாராகி வருகின்றனர். வாக்கு செலுத்தப்போகும்போது என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். 

 

voting


 

  • வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் எவ்விதமான வாகனங்களையும் நிறுத்தக்கூடாது, கூட்டமாக நின்று பேசக்கூடாது. முதியவர்கள் மற்றும் இயலாதவர்கள் வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். 
     
  • மறக்காமல் பூத் ஸ்லிப்புடன், வாக்காளர் அடையாள அட்டை அல்லது ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை போன்ற ஏதேனும் ஒரு அதிகாரப்பூர்வ அட்டையை எடுத்துச்செல்லவேண்டும். 
     
  • முதலில் அடையாள அட்டை பரிசோதனை, அடையாள மை ஆகியவற்றை முடித்தபின்பு சென்று வாக்களிக்க வேண்டும். 
     
  • உங்கள் வாக்கு நீங்கள் வாக்களித்தவருக்குதான் பதிவாகிறதா என்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும். வாக்குப்பதிவு மின்னணு சாதனத்திலும், ஒப்புகைச்சீட்டு சாதனத்திலும் சரியாக இருக்கிறதா என்பதை பார்க்கவேண்டும். அப்படி அதில் ஏதும் குளறுபடி இருப்பின் அதை அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். 
     
  • அங்கு சென்று சத்தமாக பேசுவது, கூடிப்பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 
     
  • ஆண், பெண் வரிசை தனித்தனியாக இருக்கும், அதைப்பார்த்து நிற்கவேண்டும். மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். பெண்களுக்கென இருக்கும் சிறப்பு வாக்குச்சாவடிக்குள் ஆண்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
     
  • வாக்குச்சாவடிக்குள் செல்ஃபி எடுப்பது, வாக்கு செலுத்துவதை புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களைச் செய்யக்கூடாது. 
     
  • அடையாள அட்டை இல்லாமல் செல்லக்கூடாது, நீண்ட நேரம் வாக்கு செலுத்தும் இடத்தில் நிற்கக்கூடாது, வீண் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது. 
  •  
  •  
  •