Complain to the Sp office on ADMK former minister 

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் சேகர் ரெட்டி மற்றும் பிரமானந்தாதண்டா ஆகிய இருவருக்கும் சொந்தமான ரூ. 300 கோடி மதிப்புடைய 7 ஏக்கர் நிலத்தில் 'ஜோதிர் மை பார்க்கிங்க்' என்ற பெயரில் சேகர் ரெட்டியின் பி.ஏ. ரிஷிகுமார் என்பவர் பார்க்கிங் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை 11 மணி அளவில் ரிஷிகுமாருக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி போன் செய்து, 'பார்க்கிங் இடத்தை இன்று (07.11.2024) மாலைக்குள் காலி செய்துக் கொண்டு வெளியேற வேண்டும்’ என மிரட்டல் விடுத்ததாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்க கோரியும் ரிஷிக்குமார் வேலூர் எஸ்.பியிடம் புகார் மனு அளித்துள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட இடத்திற்கு தொடர்பு இல்லாத கே.சி. வீரமணி அந்த இடத்தை காலி செய்ய வேண்டும் என மிரட்டுவதாக ரிஷிகுமார் குற்றச்சாட்டு வைத்தார்.