![Vijayadharani](http://image.nakkheeran.in/cdn/farfuture/w2aV8IKLjSGC32GILTiGw-4kWR2jEoi-J9XN29SEozE/1533347636/sites/default/files/inline-images/Vijayadharani%20500.jpg)
தினகரன் அணியை சேர்ந்த 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, அந்த வழக்கு தற்போது 3வது நீதிபதி அமர்வுக்கு சென்றிருக்கிறது. இதுதொடர்பாக ஆளும் அதிமுகவினரும், தினகரன் அணியினரும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி:-
தங்க தமிழ்ச்செல்வன் தனது வழக்கை வாபஸ் பெறுவதாக கூறுகிறார். அப்படி வாபஸ் பெற்றுவிட்டால் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று வழக்கு போடுவார்கள். அப்படி இடைத்தேர்தல் அறிவித்தால், ஆண்டிப்பட்டியில் ஒரு சோதனை மாதிரி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும். ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடந்தபோது என்னென்ன பார்த்தமோ, கேள்விப்பட்டமோ அதனை ஆண்டிப்பட்டியிலும் பார்க்கலாம். ஆளும் கட்சியும் தங்களது பலத்தை காண்பிக்கும்.
18 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என்று தீர்ப்பு வந்தால் அத்தனை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும். ஒட்டுமொத்தமாக 18 தொகுதிகளில் தேர்தல் நடந்தால் அமமுகவால் தேர்தல் பணி செய்வது கடினம். ஆண்டிப்பட்டி ஒரு தொகுதியில் மட்டும் தேர்தல் நடந்தால் ஆர்.கே.நகர் போல குக்கர் அணி ஜெயித்துவிடும். இந்த ஒரு தொகுதியில் அமமுக வெற்றி பெற்றாலும் தமிழக அரசுக்கு எந்த ஆபத்தும் வரப்போவதில்லை. சட்டமன்றத்தில் இரண்டு எம்எல்ஏக்களாக அவர்கள் பலம் கூடும் அவ்வளவுதான்.
மற்ற 17 பேரும் வழக்கை வாபஸ் வாங்குகிறார்களா, வழக்கை சந்திக்கிறார்களா என்பதை தினகரன்தான் முடிவு செய்கிறார். அந்த அணியில் சிக்கல் இருப்பதாக தெரியவில்லை என்பதே தனது கருத்து என்கிறார்.