Skip to main content

'பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு... கமலை சாடிய ராஜேஸ்வரி பிரியா!

Published on 13/08/2019 | Edited on 13/08/2019


கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுக கூட்டணியில் பாமக இணைந்ததை அடுத்து அக்கட்சியில் இருந்து பிரிந்து வெளியே வந்தார் ராஜேஸ்வரி பிரியா. இவர் பாமகவில் இருந்து வெளியே வந்ததும், கமலை உடனடியாக சந்தித்து பேசினார். அதனால் எப்படியும் மக்கள் நீதி மய்யத்தில்தான் இணைவார் என்ற பேச்சு எழுந்து. ஆனால் எந்த கட்சியுடனும் இணையவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் யாருடனாவது கூட்டணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரையுமே நம்பாமல் தனியாகவே ஒரு புதிய கட்சியை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை வறுத்தெடுத்து வருவதுடன், கமலையும் சேர்த்து விமர்சித்து வருகிறார்.
 

G

 

இதுதொடர்பாக அவர் பேசியபோது," கலாச்சாரத்தை சீரழிக்கும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இதுதொடர்பாக நடிகர் கமலிடமே உங்கள் நிகழ்ச்சியை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால், இதனால் எந்த மாற்றமும் இதுவரை நடைபெறவில்லை. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நமக்கு எதுக்கு? இதனை 60 ஆண்டுகளாக திரைத்துறையில் இருக்கும் கமல் தொகுத்து வழங்குகிறார். பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. கமலுக்கு சமூக பொறுப்பு என்பது அறவே இல்லை. மக்களை வழிநடத்த வேண்டும் என்று நினைக்கும் கமலுக்கு அதற்கான தகுதி சுத்தமாக இல்லை. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வெளி மாநில ஆட்களுக்கு நம் மாநிலத்தை பற்றி எதுவுமே தெரியாது.கலாச்சாரம், பண்பாடு இது எதுவும் இல்லை. 
 

 

இவங்களுக்கு ஒரு விளம்பரம் வேணும், இன்னொன்னு பணம் வேணும். இதில் கலந்து கொள்பவரின் கோபம், ஈகோ, சண்டை இதெல்லாம் நாம தெரிஞ்சிக்கிட்டு என்ன பண்ண போறோம்? ஆபாசமா டிரஸ் போட்டுக்கிட்டு, படுத்துக்கிட்டு, பேசிக்கிட்டு, 60 கேமிராக்கள் இருப்பது உங்களுக்கு சாதாரண விஷயமா இருக்கலாம். ஆனால் எங்க குழந்தைங்க நாளைக்கு அதே மாதிரி இருக்கணும்னா நாங்க என்ன பண்றது? இது தமிழர்களுக்கே சம்பந்தமே இல்லாத ஒரு நிகழ்ச்சி. என்ன ஆர்மி? நம்ம ராணுவத்தில் நிஜமாவே செத்து போறவங்களை பத்தி ஏதாவது கவலை இருக்கா? எந்த ராணுவ வீரரையாவது இவர்கள் ஹீரோவா ஏத்துட்டு இருக்காங்களா? ஏன் விவசாயத்தை பத்தி நிகழ்ச்சி நடத்தலாமே, ஏன் நடத்தல? 2 குழந்தைக்கு நான் தாய். அதனால் ஒரு பெற்றோர் என்ற வகையிலும் இதனை எதிர்கிறேன்" என்றார்.