Skip to main content

“வாயை அடக்குங்கள்... இல்லை என்றால் அடக்கப்படுவீர்கள்...” -வேல்முருகன் ஆவேசம்

Published on 12/11/2020 | Edited on 12/11/2020
ghj

 

 

மனுநீதி தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இதுதொடர்பாக பாஜகவினர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். இதனை எதிர்த்தும் மனுநீதியை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மத்திய அரசை கடுமைாக சாடி பேசினார். அவர் பேசியதாவது,

 

"இந்த பாசிச பாஜக ஆட்சி இந்தியாவில் என்றைக்கு வந்ததோ அன்றில் இருந்து ஜனநாயகம் இந்தியாவில் கிடையாது. என்சிஆர் போன்ற விஷயங்களுக்காக அதிக கூட்டங்களில் கலந்துகொண்டு என்னுடைய எதிர்ப்பை தெரிவித்திருக்கிறேன், அது உங்களுக்கும் தெரிந்திருக்கும். அதனால் இந்த சங்கி நண்பர்களுக்கு இதற்கு மேல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் எங்கள் அண்ணன் திருமாவை பற்றி பேசுகிறீர்கள். வாயை அடக்குங்கள், இல்லை என்றால் எந்த சங்கியாக இருந்தாலும் அடித்து, நொறுக்கி அடக்கப்படுவீர்கள் என்பதை மட்டும் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்கிறேன். நான் விடுதலை சிறுத்தைகள் மீது கோபத்தில் இருக்கிறேன். பழைய சிறுத்தைகளாக நீங்கள் இல்லை. அப்படி இருந்திருந்தால் கண்டவன் எல்லாம் திருமாவை பற்றி பேச விட்டிருக்கமாட்டீர்கள். சினிமாக்காரி காயத்ரி ரகுராம் எல்லாம் அண்ணன் திருமா பற்றி பேசுகிறார், அவரின் அரசியல் என்ன, தொலைநோக்கு திட்டங்கள் என்ன என்பதை பற்றி எல்லாம் தெரியாத அவர் அண்ணனை அவதூறு செய்து வருகிறார்.

 

அண்ணனின் அரசியல் வரலாறு அந்த சங்கிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தாலும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எவ்வளவு துணிச்சல் இருந்தால் அனுமன் சேனா வானரப்படைகள் எல்லாம் எங்கள் அண்ணன் மீது கொலை மிரட்டல் தொணியில் பேசியிருப்பார்கள். அவர்களுக்கு யார் இந்த துணிச்சலை கொடுத்தது. காவல்துறை இன்றளவும் அதனை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. அந்த அமைப்பை சேர்ந்த நபர் தற்போது பேசியதை யாராவது ஏற்றுக்கொள்ள முடியுமா? அசிங்கத்தின் உச்சமாக இருக்கிறது. திமுகதலைவர் ஸ்டாலின் அவர்களிடம் தொடங்கி என்னைவரை அந்த நபர் யாரையும் விட்டுவைக்கவில்லை. நாகரீகம் சிறிதும் இன்றி கடுஞ்சொல் பேசியிருக்கிறார். இதனை நாங்கள் ஒருபோதும் சும்மா விடப்போவதில்லை. நாங்கள் யார் என்று காட்டும் நேரம் வந்துவிட்டது. நானும் எங்கள் தோழர்களிடத்தில் சொல்லியிருக்கிறேன் அன்பான பாசமான கவனிப்பிற்கு! அதனை நிச்சயம் தொண்டர் நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். 

 

நாங்கள் முதலமைச்சர், மோடி என்று அவர்களையே வாங்க, நேருக்கு நேர் சண்டைக்கு என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் என்வென்றால் எங்களிடமே பூச்சாண்டி காட்டுகிறீர்கள். இதற்கெல்லாம் எங்கள் இயக்கங்களில் இருக்கின்ற அடிமட்ட தொண்டர்கள்கூட பயப்பட மாட்டார்கள். எங்களிடம் இன்றைக்கு இல்லை, எப்போதும் உங்களின் பருப்பு வேகாது. நாங்கள் அரசியலை அனைத்து விதமாகவும் அறிந்தவர்கள். எந்த படமும் எங்களிடம் ஓட்ட முடியாது. யாத்திரைக்கு தடை விதித்திக்கப்பட்டுள்ளது என்ற கூறுகிறார்கள். ஆனால் தினமும் யாத்திரை நடைபெற்று வருகிறது, யாரும் எதுவும் செய்யவில்லை. கைது என்ற பேரில் நாடகமாடுகிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான மக்களை இந்த இக்கட்டனான நேரத்தில் கூட்டுகிறார்கள். உங்களுக்கு காவல்துறை அதிகாரிகள் வேண்டுமானால் பயப்படலாம். நாங்கள் பயப்பட மாட்டோம். நாங்கள் திருப்பி அடிக்கின்ற கூட்டம், நினைவில் வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது" என்றார்.