Published on 11/02/2019 | Edited on 11/02/2019
![economy status](http://image.nakkheeran.in/cdn/farfuture/OYr_2g9RSZwbwnlwu_-raDI2EXpaMP1rLAVlk6nyXgo/1549908106/sites/default/files/inline-images/economy-status.jpg)
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா ஆறாவது இடத்தில் இருக்கிறது என்று மோடி இப்போ ஒரு பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்... உண்மையில் ஏழாவது இடத்தில் இருக்கிறது. முந்தைய ஆட்சியில் சீனாவுடன் இந்தியா போட்டி போட்டுக் கொண்டிருந்தது என்பதுதான் உண்மை...
அதாவது, இரண்டாவது பொருளாதாரமாக இருந்த ஜப்பானுக்கு அடுத்த இடத்தைப் பெறுவதற்கு சீனாவும் இந்தியாவும் போட்டியிட்டன. இப்போது சீனா ஜப்பானையே முந்திவிட்டது. நாம் நான்காவது இடத்துக்காவது போயிருக்க வேண்டும்.
ஆனால், இவருடைய ஆட்சியில் இத்தாலிக்கு மேலே என்பதுதான் நிலைமை. மேலும் பொருளாதார நிலையின் அளவைப் பார்த்தால் பெருமைப்பட ஏதுமே இல்லை. மேய்க்கிறது எருமை… இதுல பெருமை வேறயா? என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்…