Skip to main content

அசிங்கப்படுத்தும் அண்ணாமலை; உணர்வே இல்லாத அதிமுக - குடியாத்தம் குமரன் விளாசல்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

 Gudiyatham Kumaran | Edappadi | Annamalai | Udayanidhi  Stalin 

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை தி.மு.க மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் குடியாத்தம் குமரன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அண்ணாமலை பாஜகவிற்கு தலைமை ஏற்றதில் இருந்து அண்ணா, பெரியார் குறித்து பேசி வருகிறார். இவரைப் போலவே, எச்.ராஜ்வாவும் தொடர்ந்து இதுபோன்று பேசி வருகிறார். இத்துனை நாள் அண்ணா, பெரியார் மீது விமர்சனம் வைக்கும் பா.ஜ.க.வை ஒரு நாளும் அ.தி.மு.க. கண்டித்தது இல்லை. ஆனால், தி.மு.க. எப்பொழுதும் இந்த விமர்சனத்திற்கு பதில் கொடுத்து வந்துள்ளது. தற்போது நடந்துள்ள அண்ணா விவகாரத்தில் கூட, தி.மு.க. சார்பாக ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "அண்ணாமலைக்கு அழிவுக் காலம் நெருங்கி விட்டது. அண்ணா, பெரியார் போன்றோர் இல்லை என்றால் அண்ணாமலை ஆடுதான் மேய்திருக்க முடியும். ஐ.பி.எஸ். ஆகியிருக்க முடியாது" என அறிவாலயத்தின் முன்பே பேட்டி அளித்தார். எனவே, அண்ணாமலை கூட்டணிக் கட்சியான அ.தி.மு.க.வை சமீபமாக விமர்சித்து வருவதால், ஜெயக்குமார் போன்றோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். சொல்லப் போனால், பாஜகவிற்கு நாலு எம்.எல்.ஏ.க்களை பிச்சை போட்டதே அ.தி.மு.க. தான். கூட்டணி இல்லையென்றால் பாஜக டெபாசிட் இழந்திருக்கும். ஆகையால், அண்ணாதுரை குறித்து பேசியதை நாங்கள் உணர்வுப் பூர்வமாக கண்டிக்கிறோம். மாறாக, அ.தி.மு.க. அண்ணாமலையை விமர்சிக்கவே இந்த விவகாரத்தை பயன்படுத்தினர்.

 

அண்ணாமலை திமிர்த்தனம் கொண்டவர் என்பதற்கு உதாரணம் அவர் மன்னிப்பு கேட்காதது தான். சமீபத்தில் துரைமுருகன் அவர்களிடம் யூட்யூப் சேனல் ஒன்றில் அண்ணாமலை குறித்து கேட்டார்கள். அதற்கு அவர், "ஒரு கட்சியை காலி செய்ய வேண்டும் என்றால் இவரைத் தலைவராக நியமிக்கலாம்" என சொல்லியிருந்தார். அண்ணாவை பற்றி தவறாக பேசிவிட்டு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் எவ்வளவு திமிர் இருக்கும். ஆகவே, அண்ணா ஒருபோதும் மன்னிப்பு கேட்டதில்லை. தேவர் அவர்களும் அண்ணாமலை சொன்னது போல் பேசியதில்லை. அண்ணாவும் மனிப்பு கேட்கும் அளவு எங்கும் பேசியதும் இல்லை. அண்ணா அவர்கள் பெரியாரிடம் இருந்து பிரிந்து வந்து தி.மு.க.வை தொடங்குகையில், "ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் பிள்ளையாருக்கு தேங்காவும் உடைக்க மாட்டேன். பிள்ளையாரையும் உடைக்க மாட்டேன்" என நாகரீக அரசியல் செய்தவர். இப்படி இருக்க, அறிஞர் அண்ணா குறித்து விமர்சிப்பது, அவர்களுக்கும் அவர்களுடன் கூட்டணி வைப்பவர்களுக்கும் தான் மண்ணோடு மண்ணாகப் போகிறார்கள். மேலும், இந்த செயல் மல்லாக்கப் படுத்துக் கொண்டு பா.ஜ.க. எச்சில் துப்புவது போலத் தான்.

 

செல்லூர் ராஜு விமர்சிப்பது போலில்லை. நான் சொல்கிறேன், தி.மு.க. தான் ஒரே சமூக நீதிக் கட்சி. வேங்கை வயல் சம்பவத்தில் எவனோ ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரன் இரவில் மலம் கலந்துவிட்டுச் சென்று ஆட்சிக்கு களங்கம் விளைவிக்க செய்தது தான். சீமான் என்ன அவ்வளவு பெரிய ஆளா... இந்த மண்ணை, மக்கள் உங்களுக்கு கொடுத்து விடுவார்களா?  இந்தத் தேர்தலில் நடப்பதை பார்ப்போம்.

 

உதயநிதி சனாதனத்தை ஒழிப்பேன் எனக் கூறுவது, "அனைவரும் சமம்" என மாறுவதற்குத் தான். எனவே, இந்து மதத்தை, அதன் ஆன்மிக சிந்தனைகளை, கோவிலை ஒழிப்பது இல்லை. அனைவரும் சாமி கும்பிடலாம், கோவிலுக்குள் செல்லாம், ஏன் தி.மு.க.வினர் கூட காவடி எடுக்கிறார்கள். உதயநிதி கூட ஹிந்து மதத்தை இழிவுபடுத்தவில்லை. அவரின் ஜாதி சான்றிதழிலும் ஹிந்து என்று தான் உள்ளது. மாறாக, சனாதனம் என்பது, "தொட்டால் தீட்டு.. பார்த்தால் தீட்டு" என்று இருந்தது தான். இவற்றையெல்லாம் ஒழித்து, இன்றைக்கு கோவிலுக்குள் அனைவரும் செல்வதற்கே நாம் தானே காரணம். ஆகவே, நாம் எதிர்க்க வேண்டிய சனாதனம், புதிய நாடாளுமன்ற நிகழ்வுக்கு ஜனாதிபதி செல்லாமல், நடிகைகள் சென்றார்களே அதைத்தான். மேலும், பா.ஜ.க. பழங்குடியினப் பெண் திரௌபதி முர்மு அவர்களை ஜனாதிபதியாக நியமித்தது. அதற்கு, முதல்வர் ஸ்டாலின் கூட வாழ்த்து தெரிவித்தார். ஆனால், நாங்கள் கேட்பது, நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு ஏன் அவர் அழைக்கப் படவில்லை. காரணம், அவர், கைம்பெண், தாழ்ந்த ஜாதி என நீங்கள் நினைப்பது தான். இந்த சயமத்தில் தான், முர்மு அவர்களுக்கு வேறொரு மாநிலத்தில் நிகழ்வு ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டனர். இதுபோன்ற சனாதன போக்கைத் தான் உதயநிதி எதிர்த்தார். 

 

பா.ஜ.க. வருகிற தேர்தலில் வாக்கு கேட்பதற்கு கூட எந்த ஒரு திட்டங்களையும் செய்யவில்லை என நினைக்கிறன். அதனால், சமீபத்தில் டீசல் விலையை 200ரூ குறைத்துள்ளனர். தற்போது, மகளிர் மசோதாவும் தேர்தலையொட்டி தான் கொண்டுவரப்பட்டது. இருந்தும், ஸ்டாலின் அவர்களைப் போல நானும் இதனை மனமார வரவேற்கிறேன். ஆனால், ஒன்பது ஆண்டுகளாக ஏன் இதனை நிறைவேற்வில்லை. இதனை வைத்து மோடி அவர்கள் பெண்களுக்கு முன்னேற்றம் கண்டுள்ளார் என சொல்கிறார்கள். இருந்தும், இதை நாங்கள் வரவேற்கிறோம். 

 

தொடர்ந்து, நீதிமன்றம் உதயநிதி அவர்களை சனாதனம் விவகாரத்திற்கு விளக்கமளிக்க கேட்டுள்ளது. அவர் ஒன்றும் மதத்தை ஒழிப்பது போலெல்லாம் பேசவில்லை. அதேபோல், நீதிமன்றமும் நியாயமாக விளக்கத்தைத் தான் கேட்கிறது. எனவே, உதயநிதி நிச்சயம் நீதிமன்றத்திற்கு சென்று முறையான விளக்கத்தை அளிப்பார். உறுதியாக, நீதிமன்றத்தை திராவிட மாடல் தி.மு.க. அரசு மதிக்கும்.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...