"தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடம் வேலைக்காக கடந்த அக்டோபரில் சேர்ந்த ஒரு பெண்மணி, தன்னிடம் கோகாய் தவறாக நடக்க முயன்றார்ன்னு புகார் கொடுத்து பரபரப்பாயிடிச்சி. அந்தப் பெண்மணி, ஒரு மாற்றுத் திறனாளியிடம் வேலை வாங்கித் தருவதாக 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கினாராம். இது தொடர்பான புகார் காவல்துறைக்குப் போனதால், அந்தப் பெண்மணியை, கோகாய் வேலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதமே டிஸ்மிஸ் செய்துவிட்டாராம். இந்த நிலையில்தான் இப்போது அந்தப் பெண்மணி கோகாய்க்கு எதிராக அதிரடியாகப் பாலியல் புகாரை எழுப்பி யிருக்கார். அதோட உச்ச நீதிமன்ற நீதிபதி கள் 22 பேருக்கு, இது தொடர்பாகக் கடிதமும் எழுதி நீதிகேட்டிருக்கார். இந்தப் புகார் தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் வைத்தே தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயிடமே விளக்கம் கேட்டிருக்கார்.''
"ஆமாம்ப்பா... இது பொய்ப் புகார் என்று விளக்கமளித்திருக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தன் மீதான இந்த புகாரை விசாரிக்கும் பொறுப்பை அருண் மிஸ்ரா, சஞ்சய் கன்னா ஆகியோர் அடங்கிய பெஞ்ச்சிடம் ஒப்படைச்சாரே?'"ஆமாங்க தலைவரே, இந்த வழக்கை விசாரிச்ச அந்த உச்சநீதிமன்ற பெஞ்ச், இந்த புகாருக்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லைன்னு சொல்லியிருக்கு. சில முக்கிய மான வழக்குகள் குறித்த தீர்ப்பைத் தான் வழங்க இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட புகாரை தன் மீது எழுப்புவதன் பின்னணியில் ஒரு பெரிய சதித்திட்டம் இருப்பதாக ரஞ்சன் கோகாய் சொல்லியிருக்கார்.''தலைமை நீதிபதிக்கு எதிரான இந்த விவகாரத்தில் ஆளும் பா.ஜ.க. தரப்பு ஒரு பக்கம்னா எதிர்க்கட்சியான காங்கிரஸ் சீனியர் வழக்கறிஞர்களும் களத்தில் இருக்காங்களே?''
"ரபேல் ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு எதிராக "இந்து' நாளிதழ் வெளியிட்ட ஆவணங்களை, முற்றாக ஒதுக்கமுடியாது. அவற்றை உச்ச நீதிமன்றம் பரிசீலிச்சுதான் முடிவெடுக்கும்ன்னு அண்மையில் உச்ச நீதிமன்றம் உறுதியாகச் சொன்னது. இதனால பா.ஜ.க. அரசுக்கு ரஞ்சன் கோகாய்மீது கடுமையான கோபமாம். அதேபோல், நேசனல் ஹெரால்டு பத்திரிகையின் பங்குகளை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாங்கியது தொடர்பான வழக்கு, இப் போது உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது. அதேபோல் ரபேல் ஊழல் வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றும் விசா ரணைக்கு வந்தது. இதனால்தான், கோகாய்க்கு எதிரான புகாரில் காங்கிரஸ் வழக்கறிஞர்களான கபில் சிபல், இந்திரா ஜெய்சிங், துஷ்யந்த் தவே, பிருந்தா குரோவர் போன்றோர் தீவிர ஆர்வம் காட்டுகிறார் களாம். எது எப்படி இருப்பினும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஒருவர் மீதே இப்படி ஒரு புகார் எழுந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.''