இங்லாந்து, ஜிப்ரால்டர் கடற்பகுதியில் ஒரு விசித்திர சம்பவம் நடந்துள்ளது. அந்த கடல் வழியாக படகில் சென்றவர்கள் இதை படம்பிடித்துள்ளனர். ஜிப்ரால்டரில் இருந்து 120 நாட்டிகல் மைல் தொலைவில்தான் இந்த அரிய காட்சி நடந்துள்ளது. நடுக்கடலில் டால்பின்கள், நீல நிற ஒளியை உமிழ்ந்து விளையாடியது போன்ற அரிய காட்சிதான் அது. சுமார் அரை மணி நேரம் இதுபோன்று விளையாடியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஒளி டால்ஃபின்களிலிருந்து வந்த ஒளி என்றும் தெரிவிக்கின்றனர். நிறையபேர் இது என்ன என்ற கேள்வியையும் எழுப்பியிருந்தனர்.
மாலத்தீவுகளின் கடல்களில் தண்ணீர் கலங்கும்போது ஒரு வித நீல ஒளி ஏற்படும். இந்த ஒளிக்கு "உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி" (bioluminescence) என்று பெயர். "பிளூரெஸ்ஸ்ண்ட் ப்ளங்க்டோன்" என்ற கடல் உயிரி அதிகளவில் காணப்படுவதுதான் இதற்கு காரணம். கடல் அலைகளாலும், நீரை கலக்குவதாலும் இந்த உயிரிக்கு தொந்தரவு ஏற்படுவதால் இது நீல நிறமாக மாறுகிறது. இரவில் இது நன்றாக தெரியும். ஒருவேளை ஜிப்ரால்டர் கடற்பகுதியும் இப்படியான அமைப்பைக் கொண்டது. டால்பின்கள் அதில் நீந்தி சென்றபோது இப்படியான ஒளி ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அந்த வீடியோவின் கீழ்பகுதியில் தண்ணீர் அதிகமாக கலங்குகிறது. இது அந்த படகு செல்வதால் அந்த கடல்நீர் கலங்கி இந்த ஒளி ஏற்பட்டிருக்கிறது.
NIGHT SHOW: A pod of dolphins feeding on bioluminescent plankton and illuminated by the tiny organisms in the Mediterranean Sea surprised a group of onlookers on board a boat off the coast of Gibraltar. https://t.co/OygOWBmxpy pic.twitter.com/JQzEzhS71G
— World News Tonight (@ABCWorldNews) December 6, 2018