Skip to main content

கொரியா தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கும் விழா!

Published on 08/10/2019 | Edited on 08/10/2019

 

 

தென் கொரியாவில் நடந்த தமிழ் கலை இலக்கிய சந்திப்பு நிகழ்வில் 2019-ம் ஆண்டிற்கான கொரிய தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்பட்டது

 

கொரிய தமிழ்ச்சங்கம் சார்பாக அக்டோபர் 6 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கியாங்கி பல்கலைக்கழக பன்னாட்டு வளாகம், சுஒன்-ல் முன்றாவது தமிழ் கலை இலக்கியச் சந்திப்பு நடைபெற்றது. இதில்  கொரியா தமிழ்ச்சங்கத்தை சார்ந்த பல்வேறு துறைகளில் சாதித்த உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கொரியா தமிழ்ச்சங்க விருதுகள் வழங்கப்பட்டன. அறிவியல் துறையில் சிறப்பான ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கபட்டதற்காக முப்பது பேருக்கும், பெண் ஆராய்ச்சியாளர் மூன்று பேருக்கும், பொறியியல் துறையில் 7 உறுப்பினர்களுக்கும், விளையாட்டுத்துறையில் சாதித்த இரண்டு அணிகளுக்கும் வழங்கப்பட்டன.
 

korea



சிறந்த தொழில்நுட்ப மேலாண்மையில் இருவருக்கும், மக்களிடையே சமுக விழிப்புணர்வை ஏற்படுவதற்காக இருவருக்கும் (ஆதனுர் சோழன், மூத்த துணை ஆசிரியர், நக்கீரன், மற்றும் ஆழி செந்திநாதன், ஆழி பதிப்பகம்), சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கும், படைப்பாளிகள் இருவருக்கும் (மெரீனா புரட்சி திரைப்பட இயக்குனர் எம். எஸ். இராஜ் உள்ளிட்ட), அறிவியல் தமிழை வளர்ப்பதர்க்காக இருவருக்கும் வழங்கப்பட்டது.

 

குறிப்பாக இந்த விழாவில் உரையாற்றிய இந்த விழாவில் தமிழ்-கொரியா மொழி மற்றும் பண்பாட்டு ஒற்றுமைகளும் என்ற தலைப்பில் உரையாற்றிய, முனைவர். சிவஞானம் பாலசுப்பிரமணியனுக்கு (ஒரிசா பாலு) "உலகத்தமிழன் விருதும்",  கணினித்மிழுக்கு அரும்பங்காற்றிய காலஞ்சென்ற மா. ஆண்டோ பீட்டர் குறித்து நினைவு சொற்பொழிவாற்றிய  ஆளூர் சாநவாஸ் அவர்களுக்கு "சமூக பண்பாளர்" விருதும் கொரியா தமிழ்ச்சங்கத்தால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டது. முன்னதாக இந்த நிகழ்வில் இளம் சட்டவாளரும் அரசியல் தலைவருமான இராஜீவ் காந்தி இந்திய சமூக மற்றும் அரசியலில் பாலின சமத்துவம் என்ற தலைப்பில் இணையவழி நிகழ்நிலை உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

korea



இந்த விருது வழங்கும் நிகழ்வினை சங்கத்தின் உறுப்பினர்களான  விஜயலட்சுமி பத்மநாபன், முனைவர். காளிமுத்து பாண்டி, ஆனந்த் முது மற்றும் நந்தா முருகன், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.  முன்னதாக விருதுக்கான தெரிவுக்குழு தலைவர் முனைவர். புருசோத்தமன் பாஸ்கரன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர். செல்வராஜ் ஆரோக்கியராஜ் ஆகியோர் பரிந்துரைத்து கொரிய தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் முனைவர் இராமன் குருசாமி, கொரிய தமிழ்ச்சங்கத்தின் தலைவர் முனைவர் சுப்ரமணியன் இரமசுந்தரம் ஆகியோர் விருதாளர்களை அறிவித்தனர்.