Skip to main content

இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் - உதயநிதி ஸ்டாலின் கேள்வி?

Published on 16/05/2018 | Edited on 18/05/2018
irumbu thirai.jpeg

 

 

udhaynidhi


காளி ரங்கசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'ஒரு குப்பைக் கதை'. நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில் மனிஷா யாதவ் நாயகியாக நடித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில், இதன் இசை வெளியீட்டு விழா இன்று நடந்தது. அதில் நடிகர்கள் ஆர்யா, சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், இயக்குநர்கள் அமீர், பாண்டிராஜ், எழில், சீனு ராமரசாமி, பொன்ராம், சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அப்போது படத்தின் விநியோகஸ்தரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசுகையில்..."தினேஷ் மாஸ்டருக்கும், எனக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. எனது முதல் மூன்று படங்களுக்கும் தினேஷ் மாஸ்டர் தான் நடனம் சொல்லிக் கொடுத்தார். என்னை நடனமாட ஊக்குவித்தவர் இவர் தான்.

 

 

எங்கள் இருவருக்கும் ஒரு அண்ணன், தம்பிக்குண்டான பாசம் இருக்கிறது. இப்படி இருக்கும் போது, இவர் ஏன் ஹீரோவாக நடிக்கிறார் என்று முதலில் யோசித்தேன். பின்னர் படம் பற்றி கேள்விப்பட்ட நான், படத்தை நாமே வெளியிடலாம் என்று முடிவு செய்தேன். ஒரு குப்பைக் கதை படம் மைனா போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும். நல்ல படங்கள் வந்தால் பாராட்டுவதும், சுமாரான படங்களை விமர்சிப்பதும் வழக்கம் தான். அந்த வகையில் இந்த படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரும் என்று நம்புகிறேன். படம் வரும் வெள்ளியன்று ரிலீசாக இருக்கிறது" என்றார்.

சார்ந்த செய்திகள்