Published on 29/11/2024 | Edited on 29/11/2024
தமிழில் வளர்ந்து வரும் இசையமைப்பாளராக இருக்கிறார் திபு நினன் தாமஸ். கடந்த ஐந்து வருடங்களில் வெளியான படங்களில் 'கனா', 'பேச்சுலர்' படத்தின் 'அடியே' பாடல், சித்தார்த்தின் 'சித்தா' என அடுத்தடுத்து இவர் இசையமைப்பில் வெளியான படங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாது, 2024 ஆம் ஆண்டில் மலையாளத் திரையுலகில் அதிக வசூல் செய்த படங்களில் நடிகர் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த 'ஏ.அர்.எம்' மலையாளப் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார்.
இந்த நிலையில் 'டீசல்' படத்தில் இவர் இசையமைத்த 'பீர் சாங்' ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளது. கானா ஸ்டைலில் வெளியான பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளனர்.