Skip to main content

சொன்னதை செய்து காட்டிய இயக்குநர் சுசீந்திரன்... குவியும் பாராட்டுகள்!

Published on 21/06/2021 | Edited on 21/06/2021

 

Suseenthiran

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பத்தாயிரத்திற்கும்கீழ் பதிவாகிவருகிறது. இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசிற்கு பெரிய அளவில் நிதித்தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் பொருட்டு, பொதுமக்கள் மற்றும் தொழில்நிறுவனங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியளித்து உதவுமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி திரட்ட இயக்குநர் சுசீந்திரன் புதிய முயற்சியை கையில் எடுத்தார்.

 

நடிப்பு மற்றும் இயக்கம் பற்றி 10 நாட்கள் கட்டண ஆன்லைன் வகுப்பு நடத்தி, அதில் கிடைக்கும் தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாக சுசீந்திரன் அறிவித்தார். ஜூன் 14ஆம் தேதி தொடங்கிய இந்த கட்டண ஆன்லைன் வகுப்பில் பலரும் கலந்துகொண்டனர். இதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ. 5 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு இயக்குநர் சுசீந்திரன் அளித்துள்ளார். திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்த சுசீந்திரன், அதற்கான காசோலையை அவரிடம் வழங்கினார். சுசீந்திரனின் இந்தச் செயலுக்கு சமூகவலைதளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

7 வது முறையாக டி.இமானுடன் இணையும் சூப்பர் ஹிட் இயக்குநர்

Published on 25/01/2022 | Edited on 25/01/2022

 

D imman joining director Suseenthiran new movie

 

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் டி.இமான் தனது பிறந்தநாளை நேற்று (24.1.2022) கொண்டாடினர். இதனைதொடர்ந்த்து அவருக்கு திரைபிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர். அந்த வகையில்  டி. இமானின் பிறந்தநாளுக்கு வீடியோ வெளியிட்டு வாழ்த்து கூறிய இயக்குநர் சுசீந்திரன், தான் 7வது முறையாக டி.இமானுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளதாகவும், பாடல் கம்போசிங் நடைபெறுவதாகவும்  தெரிவித்துள்ளார். இவர்களது கூட்டணியில் வெளியான 'பாண்டியநாடு', 'ஜீவா', 'பாயும் புலி', 'மாவீரன் கிட்டு', 'நெஞ்சில் துணிவிருந்தால்', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது.

 

இந்நிலையில் 7வது முறையாக இந்த கூட்டணி இணையவுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.மிகப்பெரிய பட்ஜெட்டில், நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தாய் சரவணன் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே 1 ஆம் தேதி துவக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர் நடிகைகள், தொழில்நுட்ப குழுவினர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

 

 

Next Story

நடிகர் ஜெய் இசையில் கவனம் ஈர்க்கும் 'அம்மம்மா' பாடல்!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

actor jai's shiva shiva movie second song released

 

இயக்குநர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கிராமத்து இளைஞர்களின் வாழ்வையும், விளையாட்டையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜீவா, மாவீரன் கிட்டு, ஈஸ்வரன் உள்ளிட்ட வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். 

 

இந்தநிலையில் நடிகர் ஜெய் நடிக்கும் சிவ சிவா படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கி வருகிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக மீனாக்ஷி கோவிந்தராஜன் நடிக்கிறார். காளி வெங்கட், பாலா சரவணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். லென்டி ஸ்டூடியோ நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. நடிகர் ஜெய் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். 

 

சமீபத்தில் 'சிவ சிவா' படத்தின் டீசரும், முதல் பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான 'அம்மம்மா' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. கவிஞர் யுகபாரதி வரிகளில் ஹரிஹரன் மற்றும் அர்ச்சனா இப்பாடலைப் பாடியுள்ளனர்.  தற்போது இந்த பாடல் இணையத்தில் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு வருகிறது.