Skip to main content

சூர்யா படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு  

Published on 30/10/2020 | Edited on 30/10/2020
suriya film motion poster released

 

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் 'சூரரை போற்று' படத்தில் நடித்துள்ளார். கேப்டன்  கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். 

 

சூரரை போற்று படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதிலிருந்தே ரசிகர்கள், படத்தை பார்க்க ஆவலோடு காத்திருக்கின்றனர். முதலில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இப்படம், இந்திய விமானப்படையின் தடை இல்லா சான்று பெற தாமதமானதால் தள்ளிவைக்கப்பட்டது. சமீபத்தில் இந்திய விமானப்படை, இப்படத்திற்கு தடையில்லா சான்றளித்தது. இதை  தொடர்ந்து, சூரரை போற்று படம் நவம்பர் 12 ஆம் தேதி, தீபாவளி விருந்தாக அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

  

சூரரை போற்று படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர்  ஏற்கனவே வெளியாகி, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகனின் திறமையைக் கண்டு ரசித்த சூர்யா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
suriya son dev got black belt in karate

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படங்களை தவிர்த்து சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சூர்யாவின் மகன் தேவ், கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். சென்னை அஷோக் நகரில், கராத்தே பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு அகில இந்திய ஜென் கராத்தே அசோசியேசன் சார்பில் சான்றிதழ் மற்றும் பிளாக் பெல்ட் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் சூர்யாவின் மகன் தேவ் பங்கேற்று பிளாக் பெல்ட் பெற்றுள்ள நிலையில் நிகழ்ச்சிக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மொத்தம் 61 மாணவர்களுக்கு பிளால் பெல்ட் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

suriya son dev got black belt in karate

அப்போது தேவ் போட்டியில் கலந்து கொண்டு சண்டையிட்டதை சூர்யா ஆர்வமுடன் கண்டு ரசித்தார். மேலும் தனது போனில் வீடியோ எடுத்து மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. சூர்யாவின் மகன் தேவிற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.   

Next Story

பிரபலங்களின் வாழ்த்தில் களைகட்டிய ஷங்கர் மகள் திருமணம்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024

 

இயக்குநரின் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவருக்கும் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்திற்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் திருமணமான சில மாதங்களில், இருவருக்கும் விவாகரத்து நடந்தது. பின்பு இரண்டாவது முறையாக தருண் கார்த்திகேயன் என்பவருடன் ஐஸ்வர்யாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் நிச்சயம் நடந்தது. இந்த நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் - தருண் கார்த்திகேயன் தம்பதிக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலினுடன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும் ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் கார்த்தி உள்ளிட்ட திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.