Skip to main content

"ஐயோ! அதுக்குள்ள ஆரம்பிச்சிட்டாரே..." சிவகார்த்திகேயன் கிண்டலுக்கு நகைச்சுவையாக பதிலளித்த இயக்குநர் 

Published on 17/02/2022 | Edited on 17/02/2022

 

sk20 movie shooting spot video goes viral

 

டாக்டர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கும் 'டான்' படத்திலும், இயக்குநர் ரவிக்குமார் இயக்கும் 'அயலான்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் நிறைவடைந்து இறுதிக்கட்ட பணியில் உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அடுத்தாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக 'எஸ்.கே 20' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தொடங்கியுள்ளது.

 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு 'எஸ்.கே 20' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளது. அந்த வீடியோவில் படத்தின் இயக்குநருக்கு மாலை அணிவிக்கும் போது அருகில் இருக்கும் சிவகார்த்திகேயன் " ஹாப்பி மேரீட் லைஃப் ப்ரோ" என்று கூற படத்தின் இயக்குநரோ "ஐயோ! அண்ணையா...அதுக்குள்ளே ஆரம்பிச்சிட்டாரே.." எனக் கிண்டலாக கூறுவது பலரையும் ரசிக்க வைத்துள்ளது.  மேலும் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு சினிமா ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்