மடோன் அஷ்வின் இயக்கும் 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் போர்ஷன்ஸ் படமாக்கப்பட்டு முடிந்துள்ளது. மற்றவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து சிவகார்த்திகேயன் கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை முடித்துவிட்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி மீண்டும் 'அயலான்' பட இயக்குநர் ரவிக்குமாருடன் இணையவுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரவிக்குமார் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக உருவாகி வரும் அயலான் படம் இன்னும் முடிவடையவில்லை. சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகுவதால் கிராபிக்ஸ் பணிகள் முழுமையாக முடியாமல் இருப்பதால் தாமதம் ஆகி வருகிறதாம்.