Skip to main content

“விடைபெறுகிறோம்” - விவாகரத்தை அறிவித்த இயக்குநர் சீனு ராமசாமி

Published on 12/12/2024 | Edited on 12/12/2024
Seenu Ramasamy announces divorce

தமிழ் சினிமாவில் ‘கூடல் நகர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சீனு ராமசாமி. அதன் பிறகு ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘தர்ம துரை’ உள்ளிட்ட பல திரைப்படங்களை கொடுத்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அண்மையில் இவரது இயக்கத்தில் வெளியான ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படமும் கலவையான விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இதற்கிடையில் ஜீ.வி. பிரகாஷை வைத்து ‘இடிமுழக்கம்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கிறார். 

இந்த நிலையில் தனது மனைவியை பிரிந்து வாழப்போவதாக சீனு ராமசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் சமூகவலைதளப்பதிவில், “நானும் எனது மனைவி ஜி.எஸ்.தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துகள் எங்களுக்கு ஊக்கம்” என்று கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்