Skip to main content

“அவர் வாக்களித்ததுபோல் வீடியோ உள்ளது...” - சத்யபிரதா சாஹூ

Published on 24/04/2019 | Edited on 24/04/2019

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் காலை சென்னை  வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் வாக்களிக்க வந்திருந்தார்.  அந்த வாக்குச் சாவடியில் அவரது மனைவிக்கு மட்டும் தான் ஓட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் பெயர் வாக்காளர் பட்டியலிருந்து நீக்கப்பட்டிருந்தது. இதனால் வாக்களிக்காமல் சென்று விட்டார்.
 

srikanth

 

 

பின்னர் சிவகார்த்தியனும் அவரது  மனைவி ஆர்த்தியும் மீண்டும்  வாக்குச்சாவடிக்கு வந்து தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்தல் அலுவலர், தங்களது மேலதிகாரிக்கு இந்த தகவல் தந்ததும், டி.ஆர்.ஓ. அந்தஸ்திலுள்ள அந்த மேலதிகாரி, பூத் அலுவலர்கள் மூலமாக பூத்திலிருந்த அரசியல் கட்சிகளின் முகவர்களிடம் பேசி, அவர்களை சமாதானப்படுத்தி,  சிவகார்த்திகேயன் சேலஞ்ச் ஓட்டு போட அனுமதி பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து, வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டார் சிவகார்த்திக்கேயன். சிவகார்த்திகேயனுக்கு வாக்களிக்க அனுமதித்தது தவறு என்று பலரும் அப்போது கூறி வந்தனர்.


இதேபோல நடிகர் ஸ்ரீகாந்த்தின் பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லாமல் இருந்தது. இறுதியாக அவர் வாக்கு செலுத்திவிட்டதாக விரலில் மை வைத்துகொண்டு செய்தியாளர்களுக்கு போஸ் கொடுத்தார். நேற்று இதுகுறித்து பேசிய சத்யபிரதா சாஹூ, “ஸ்ரீகாந்த் வாக்களிக்கவில்லை. அவர் விரலில் மை மட்டும் வைத்துகொண்டார்” என்று கூறினார்.


இந்நிலையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேர்தல் தலைமை ஆணையர்,  “நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தாரா இல்லையா என்பது குறித்து தெளிவுபடுத்தும்படி அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்தது போல் வீடியோ உள்ளதால் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்