Skip to main content

நடிகர் தனுஷுக்கு ரெட் கார்டு

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

Red card for actor Dhanush

 

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தேனாண்டாள் முரளி, "எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத நடிகர்களுடன் பணியாற்றப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு முன்பணம் கொடுத்து அவர்கள் குறிப்பிட்ட தேதியில் படப்பிடிப்பிற்கு வராதது போன்ற பிரச்சனைகள் உள்ளன. அது சம்பந்தமாக நடிகர் சங்கத்திற்கு கடிதம் எழுதி இதை பேசித் தீர்ப்பதாகவும் கூறியுள்ளோம்" என்றார். 

 

மேலும் சிம்பு, விஷால், எஸ்.ஜே.சூர்யா, அதர்வா, யோகிபாபு ஆகியோர் மீது இந்த பிரச்சனை இருப்பதாகவும் அதனால் அவர்களுக்கு ரெட் கார்ட் எடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்கத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. இதில் இரு சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்காத நடிகர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், தனுஷ், அமலா பால், லட்சுமி ராய் உள்ளிட்ட 14 நடிகர், நடிகையர் மீது புகார் எழுந்ததாகவும் அதனால் அவர்கள் மீது ரெட் கார்டு கொடுக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நடிகர் சங்க கட்டடப் பணிகளுக்கு நெப்போலியன் நிதியுதவி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Napoleon gave a deposit of ₹1 crore for nadigar sangam new building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்கப் பொருளாளர் கார்த்தி 67ஆவது சங்க பொதுக்குழு கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாகவும் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் கொடுத்துள்ளதாகவும் நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதனிடையே கடந்த 22 ஆம் தேதி சங்கத்தின் புதிய கட்டடப் பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில் நடிகர் நெப்போலியன் நடிகர் சங்க புதிய கட்டடப் பணிகளைத் தொடர்வதற்காக ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

இது தொடர்பாக நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினரும் 2000 - 2006 ஆம் காலகட்டத்தில் சங்கத்தின் உபதலைவராக பொறுப்பேற்று செயலாற்றியவருமான நெப்போலியன், சங்க கட்டிட வளர்ச்சிக்காக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) வைப்புநிதியாய் வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த வாழ்த்து கூறி நன்றியை தெரிவித்துக்கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் செட்டிலாகி வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு சிவகார்த்தியேன் உதவி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
sivakarthikeyan donates nadigar sangam building

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறைவு பெறாமல் இருந்தது. இந்தப் பணி நிறைவு பெற வங்கியில் ரூ.40 கோடி கடன் வாங்க ஒப்புதல் வாங்கியிருப்பதாக சங்க பொருளாளர் கார்த்தி 67வது சங்க பொதுக்குழுக் கூட்டத்தின் போது தெரிவித்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க புதிய கட்டடம் முழுமையாக கட்டி முடிக்க அமைச்சர் உதயநிதி நடிகர் சங்க ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார். பின்பு சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினர் கமல்ஹாசன் ரூ.1 கோடி நிதி உதவி வழங்கினார். தொடர்ந்து விஜய் ரூ.1 கோடி நன்கொடை அளித்ததாக நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

இதையடுத்து நேற்று (22.04.2024) சங்கத்தின் புதிய கட்டட பணிகள் மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. பூஜை விழாவில், சங்கத்தின் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்ளிட்ட சில முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். 

இந்த நிலையில் சிவகார்த்திகேயன், நடிகர் சங்க புதிய கட்டட பணிகளைத் தொடர்வதற்காக ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிட பணிகளைத் தொடர்வதற்காக சங்கத்தின் வைப்புநிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் ஐம்பது இலட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்” எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.