சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி ( 39) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் நேற்று முன்தினம் 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாம திரையரங்கிற்கு சென்றா என குற்றம் சார்ரப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. மேலும் கடந்த 13ஆம் தேதி கைதும் செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் கைதான அன்றே அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது கைதுக்கு எதிராக ராஷ்மிகா, நானி, வருண் தவான் உள்ளிட்ட சில திரை பிரபலங்கள் குரல் கொடுத்தனர்.
இந்த நிலையில் அல்லு அர்ஜூன் கைதுக்கு எதிராக இயக்குநர் ராம் கோபால் வர்மா பதிவிட்டுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பதாவது, “ஒவ்வொரு ஸ்டாரும் அல்லு அர்ஜூன் கைதுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி... பிரபலமாக இருப்பது குற்றமா” எனக் கேள்வி எழுப்பியுள்ளார். பின்பு அதே பதிவில், “நான் இயக்கிய க்ஷண க்ஷணம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்ரீ தேவியை பார்க்க வந்த லட்சக்கணக்கான கூட்டத்தில் மூன்று பேர் இறந்தனர். அதனால் ஸ்ரீ தேவியை கைது செய்ய தெலுங்கானா போலீஸார் சொர்க்கம் செல்வார்களா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.