ஷெரிப் மாஸ்டர் தனது நடன தளமான ஜூபாப் ஹோம் ஆப்பை இன்னுமொரு உயரத்திற்கு கொண்டு செல்ல 2024, டிசம்பர் 14 அன்று சுவிட்சர்லாந்தில் நடந்த இசை துள்ளல் 2024 நிகழ்வில் பிரத்தியேகமாக அறிமுகம் செய்தார். இதற்கு முன்பு, ஜூபாப் ஹோம் 2024, நவம்பர் 30 அன்று சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமானது. அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இயக்குநர்கள் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா கலந்து கொண்டு ஜூபாப் ஹோம் தளத்தை வெளியிட்டனர். நடன ஆர்வலர்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை உருவாக்கியதற்காக ஷெரிப் மாஸ்டரின் முன்னெடுப்பை மூவரும் பாராட்டினர்.
மேலும், சோலோ மூவிஸ் வழங்கிய சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான நடன குழுக்களின் உற்சாகமான நடனங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆப், சோலோ மூவிஸ் வசி, வரதன், மற்றும் பிரபல நடன ஆசிரியர் கௌரி ஆகியோரால் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் இந்தியர்களுக்கும் பிரத்தியேகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் நடன ஒ.டி.டி. தளமான ஜூபாப் ஹோம், இப்போது ஐரோப்பா முழுவதும் கிடைக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் பொருத்தமான தனிப்பட்ட உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் ஜூபாப் ஹோம், நல்ல தளமாக உள்ளது. விரைவில் பல நாடுகளிலும் அறிமுகமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.