Skip to main content

''தமிழ்ப்படம் வந்ததால் இப்படத்தைக் கைவிட்டேன்..!'' - 'லொள்ளுசபா' ராம் பாலா

Published on 16/04/2020 | Edited on 16/04/2020


கரோனா பீதியால் பிறப்பிக்கப்பட்ட 144 ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற 'லொள்ளு சபா' நிகழ்ச்சி மீண்டும் விஜய் டிவியில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்நிகழ்ச்சியைப் படமாக்கும் முயற்சி குறித்து இயக்குனர் ராம்பாலா தற்போது விளக்கமளித்துள்ளார். அதில்...

 

vdg

 

'லொள்ளு சபா' நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தபோது அதை முழு நீளத் திரைப்படமாக மாற்றும் யோசனையை வைத்திருந்தேன். அதற்காக ஒரு பழைய தமிழ்ப் படத்திலிருந்து கருவை மாற்றி திரைக்கதை அமைத்திருந்தேன். ஆனால் அந்தச் சமயத்தில் வெளியான மிர்ச்சி சிவாவின் தமிழ்ப் படத்தின் அடிப்படை யோசனை 'லொள்ளு சபா' நிகழ்ச்சியிலிருந்து எடுக்கப்பட்டதால் என் ஸ்பூஃப் பட முயற்சியை அப்படியே கைவிட்டு விட்டேன்'' என விளக்கமளித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தில்லுக்கு துட்டு 2 மக்கள் கருத்து ...!!!

Next Story

பாலிவுட் நடிகையுடன் களமிறங்கும் சந்தானம் 

Published on 25/10/2018 | Edited on 25/10/2018
santhanam

 

 

 

சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட்  நிறுவனம் சார்பில் எஸ். ராஜ் நாராயணன் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் 'பாஜிராவ் மஸ்தானி' ஹிந்தி படத்தில் நடித்த யதீன் கார்கேயர் நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன், தெலுங்கு நடிகர் சாய்குமார் ஆகியோரும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஜான்சன் இயக்கவுள்ளார். தற்போது ‘புரொடக்சன் நம்பர் 1’ என்ற பெயரில் இப்படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் விரைவில் வெளிவரவிருக்கும்  நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது  ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.