Skip to main content

ரஜினி பார்த்து, பாராட்டிய மலையாள படம்... (படங்கள்)

Published on 05/11/2019 | Edited on 05/11/2019

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று இரவு வள்ளுவர் கோட்ட அருகிலுள்ள மேஜிக் லேண்டர்ன் ப்ரிவியூ தியேட்டரில் மலையாள படம் பார்த்தார்.

 

இளையராஜா, கே.ஜே. யேசுதாஸ் ஆகியோரின் இசை குருவான தட்சிணாமூர்த்தியின் இசையில் சாந்தி கிருஷ்னா, சுதா மகேந்திரன், மதுவந்தி. புதுமுகங்கள் ப்ரணவ் சுரேஷ், பிரிசிதா உதய் ஆகியோருடன் ஒய்.ஜி.மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள "ஷியாம ராகம்" மலையாள படத்தின் சிறப்பு காட்சி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள லீமேஜிக் லேண்டர்ன் ப்ரிவியூ தியேட்டரில் நடைபெற்றது.
 

sss


ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு ஒய்.ஜி.மகேந்திரன், இயக்குனர் சேது இய்யாள், தயாரிப்பாளர்கள் கே.விஜயலட்சுமி, லீனா ஆனந்த் மற்றும் படக் குழுவினர் அனைவரிடமும் தனது பாராட்டினை தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மூன்றாவது முறையாக பிரதமராவது மிகப்பெரிய சாதனை'-ரஜினிகாந்த் பேட்டி

Published on 09/06/2024 | Edited on 09/06/2024
'Being Prime Minister for the third time is a great achievement' - Rajinikanth interview

இந்தியா முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இன்று  பிரதமர் பதவியேற்பு மற்றும் அமைச்சரவை பதவியேற்பு விழா பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறை நரேந்திர மோடி இன்று பதவியேற்க இருக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7:15 மணிக்கு பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. குடியரசு தலைவர் மாளிகையில் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த விழாவில் வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் தலைவர்களுக்கு ஜனாதிபதி மாளிகையில் விருந்தும் நடைபெற இருக்கிறது. இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது மொய்சு, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரிஷியஸ் பிரதமர் பிரவீந்த் குமார், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால், பூட்டான் பிரதமர் ஷரிங் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.நாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் முக்கிய நபர்கள் உள்ளிட்டோரும் இந்த விழாவில் பங்கேற்கின்றனர். விளையாட்டு, சினிமா பிரபலங்கள், மதத்தலைவர்கள், பத்ம விருது பெற்றவர்கள் விழாவில் கலந்து கொள்கின்றனர். 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், தொழிலாளர்கள், ஊழியர்கள் என பலதரப்பட்ட மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டுமானம், உத்தரகாண்ட் நிலச்சரிவு மீட்புப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் இந்த விழாவில் பங்கேற்க உள்ளனர்.

மோடி பதவியேற்பு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தற்பொழுது டெல்லி கிளம்பி உள்ளார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வந்த ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ''மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்பது மிகப்பெரிய சாதனை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டு. மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியைத் தேர்வு செய்துள்ளார்கள். இது ஜனநாயகத்திற்கு ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்'' என்றார்.

Next Story

“மகிழ்ச்சி..” - அயோத்திக்கு புறப்பட்ட நடிகர் ரஜினி!

Published on 21/01/2024 | Edited on 21/01/2024
Actor Rajini left for Ayodhya!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா வருகிற 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடக்க விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மாநில அரசும், மத்திய அரசும் செய்து வருகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம், உத்தரப்பிரதேசத்திற்கு புறப்பட்டார். அதேபோல், நடிகர் தனுஷும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உத்தரப்பிரதேசம் புறப்பட்டுள்ளார். இருவரும் ஒரே விமானத்தில் பயணிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ராமர் கோயில் அறக்கட்டளையின் அழைப்பை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் இன்று உத்தரப் பிரதேசத்திற்கு புறப்பட்டுள்ளார். முன்னதாக அவர் விமான நிலையத்திற்கு செல்வதற்குமுன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள், ‘அழைப்பின் பேரில் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க செல்கிறீர்கள் எப்படி உணர்கிறீர்கள்’ என கேள்வி எழுப்பினர். 

அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், “மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்” என்று பதில் அளித்துவிட்டு சென்றார்.