Skip to main content

திரைக்கு வரும் ராயன் படம்; ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published on 25/06/2024 | Edited on 25/06/2024
Release date announcement on Raayan film

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. 

மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இப்படம், விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படத்தோடு ஜூன் 13ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், ராயன் படம் எதிர்பார்த்த தேதியில் வெளிவரவில்லை. 

இந்த நிலையில், இந்தப் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அதில், ராயன் படம் வரும் ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான புதிய போஸ்டரை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ராயன் வருகிறான்’ - டிரெய்லர் குறித்து அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
raayan trailer released tomorrow

முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின்,  ‘அடங்காத அசுரன்’, ‘வாட்டர் பாக்கெட்’, ‘ராயன் ரம்புள்’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 7ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில், ராயன் படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், இப்படத்தின் டிரெய்லர் தொடர்பான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரெய்லர் நாளை (16-07-24) வெளியாகவுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

Next Story

வெளியான பாடல்; ராயனைக் கொண்டாடும் ரசிகர்கள்!

Published on 05/07/2024 | Edited on 05/07/2024
Raayan 3rd song released

முன்னணி நடிகரான தனுஷ், தற்போது தனது 50வது படமான ‘ராயன்’ படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்தப் படத்தில், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் ‘அடங்காத அசுரன்’ எனும் பாடல் கடந்த மே 9ஆம் தேதி வெளியாகி, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர்.  இதனை தொடர்ந்து, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய ‘வாட்டர் பாக்கெட்’ பாடல் வெளியானது. கானா காதர் எழுதியுள்ள இப்பாடல் கானா ஸ்டைலில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. 

இந்த நிலையில்,  ‘ராயன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற நாளை (06-7-24) சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட இருக்கிறது. இந்த விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதற்கிடையில், இப்படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியிருக்கிறது.  ‘ராயன் ரம்புள்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பாடல், குத்து பாடலாகவும் ராப் (Rap) பாடலாகவும் இருக்கிறது. கேங்க்ஸ்டர் கதை அம்சம் கொண்ட இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல், தீம் மியூசிக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அறிவு எழுதி பாடியிருக்கும் இப்பாடலை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.