Skip to main content

பிரபல இயக்குநரை புக் செய்த நயன்தாரா படக்குழு

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

nayanthara 75 film cast and crew update

 

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் ஜெயம் ரவி - அஹ்மத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்தியில் ஷாருக்கான் - அட்லீ கூட்டணியில் உருவாகும் 'ஜவான்' படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதிக்கிறார். இதனைத் தொடர்ந்து நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒரு படத்திலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படமும் நடிக்கவுள்ளார்.  

 

இதில் நிலேஷ் கிருஷ்ணா இயக்கும் படம் நயன்தாராவின் 75வது படமாக உருவாகிறது. இப்படத்தை 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரைடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரிக்க முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் நயன்தாரா. மேலும் ஜெய் மற்றும் சத்யராஜ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக படம் குறித்த அறிவிப்பு வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த நிலையில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரத்தை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி இசையமைப்பாளராக தமன் கமிட்டாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, ரேணுகா, கே.எஸ்.ரவிக்குமார், யூடியூப் பிரபலம் பூர்ணிமா ரவி மற்றும் குமாரி சச்சு ஆகியோரை புக் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்