Skip to main content

ஸ்ருதிஹாசனுக்கு பதில் மிருணாள் தாக்கூர் - போஸ்டருடன் வெளியான அப்டேட் 

Published on 17/12/2024 | Edited on 17/12/2024
mrunal thakkur replaces shruthi hassan in Dacoit movie

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் தெலுங்கில் உருவாகி பல்வேறு மொழிகளில் வெளியான 'சலார்' படத்தில் நடித்திருந்தார். இப்போது ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தை கைவசம் வைத்துள்ளார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். 

இதனிடையே  டகோயிட் (Dacoit) என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக கமிட்டாகியிருந்தார். இந்தப் படம் தெலுங்கு மற்றும் இந்தியில் படமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதிவி சேஷ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை ஷேன்யில் டியோ இயக்குகிறார். சுப்ரியா யர்லகடா தயாரிக்கும் இப்படத்திற்கு பீம்ஸ் சிசிரோலியோ இசையமைக்கிறார். இப்படம் பான் இந்தியா படமாக பல்வேறு மொழிகளில் வெளியிடும் பிளானில் படக்குழு திட்டமிட்டிருந்தனர்.  

இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகியிருந்தது. அதில் ஸ்ருதிஹாசன் கையில் துப்பாக்கியுடன் கோபமாக நடந்து வரும் காட்சி இடம்பெற்றிருந்தது. மேலும் இதுவரை அவர் நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிந்தது. இந்த நிலையில் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதில் மிருணாள் தாக்கூர் கமிட்டாகியுள்ளார். இது தொடர்பாக அவரது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்