Skip to main content

தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் மோகன் ராஜா!

Published on 16/12/2020 | Edited on 16/12/2020

 

mohan raja

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மோகன் ராஜா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம், 'வேலைக்காரன்'. 2017-ஆம் ஆண்டு வெளியான இப்படத்திற்குப் பிறகு மோகன் ராஜா எந்தப் படத்தினையும் இயக்கவில்லை. அவர், அவரது இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த 'தனி ஒருவன்' படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்கும் முயற்சியில் உள்ளதாகக் கூறப்பட்டது. அப்படத்தின் நாயகனான ஜெயம் ரவியும் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் இப்படத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. 

 

அதன்பின் அவர், நடிகை பிரசாந்தை வைத்து அவரது தந்தை தயாரிக்க உள்ள ஒரு படத்தை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. கதை தொடர்பான விவகாரத்தில் நிலவிய மாறுபட்ட கருத்து காரணமாக, அப்படத்தில் இருந்து மோகன் ராஜா வெளியேறினார். இதனையடுத்து, மோகன் ராஜா இயக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்பது குறித்து பெரிய கேள்வி எழுந்தது.

 

இந்த நிலையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாரான நடிகர் சிரஞ்சீவியை வைத்து மோகன் ராஜா படம் இயக்க இருக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இத்தகவலை, இயக்குனர் மோகன் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது பெற்றோர் மற்றும் நலம் விரும்பிகளின் ஆசீர்வாதத்துடன், வாழ்க்கை எப்போதும் எனக்குச் சிறந்த மற்றும் பெரிய விஷயங்களையே பரிசளித்துள்ளது. இந்த நேரத்தில் மெகா ஸ்டருடன் இணைந்து ஒரு மெகா படத்தை இயக்க நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

இப்படமானது 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக் என இணைத் தயாரிப்பு நிறுவனமான கொனிடெலா புரோ தெரிவித்துள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உல்டாவான கதை - வெளியானது தனி ஒருவன் 2 அப்டேட்

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

.

thani oruvan 2 ipdate

 

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் 'தனி ஒருவன்'. சமூக கருத்துகள் குறித்து பேசப்பட்ட இப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக வில்லன் அரவிந்த் சாமிக்கு கம் பேக் படமாக அமைந்தது. 

 

இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில் அவ்வப்போது விரைவில் அப்டேட் வருவதாக பேச்சுகள் இருந்து வந்தது. பின்பு கடந்த மார்ச் மாதம், ஒரு நிகழ்ச்சியில் பேசிய மோகன் ராஜா, "தனி ஒருவன் 2 இந்த வருடம் இல்லை. அடுத்த வருடம் கண்டிப்பாக இருக்கும்" என்றார். 

 

இந்நிலையில் இப்படம் வெளியாகி இன்றுடன் 8 வருடம் கடந்துள்ள நிலையில் தனி ஒருவன் 2 குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி எஸ் நிறுவனமே தயாரிக்கிறது. மீண்டும் மோகன் ராஜா, ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா கூட்டணி இதில் கை கோர்த்துள்ளது. 

 

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், மோகன் ராஜா, இக்கதையில் எதிரி தான் ஹீரோவை தேடி வருவதாக சொல்கிறார். இந்த அறிவிப்பு வீடியோவை ஏ.எல்.விஜய் இயக்க சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தில் ஹீரோ தான் வில்லனை தேடிப் போவதாக கதை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான முறையில் வெளியான இந்த வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. .

 

 

 

Next Story

“குடும்ப படங்களுக்கான வெற்றிடத்தை நாங்கள் பிடித்துக் கொண்டோம்” - இயக்குநர் மோகன்ராஜா பேச்சு

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Director Mohan Raja Speech at Pichaikkaran 2 Pre Release Event

 

'பிச்சைக்காரன் 2'  படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் மோகன் ராஜா கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார்.

 

இந்நிகழ்வில் இயக்குநர் மோகன்ராஜா பேசியதாவது “ரொம்ப சந்தோசமா இருக்கு. என்னுடைய குடும்ப விழா இது. நான் இல்லாத விஜய் ஆண்டனியின் மேடைகள் குறைவு. என்னுடைய நல்ல நண்பன் அவர். விஜய் ஆண்டனி குறித்து மற்றவர்கள் பேசியது அவர் வாழும் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. சுயம்புவாக வரும் நபர்களின் மீது எப்போதுமே எனக்கு மரியாதை உண்டு. அப்படி ஒரு சுயம்பு தான் விஜய் ஆண்டனி. என்னுடைய நண்பரான அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷனும் கூட. விஜய் ஆண்டனிக்கு விபத்து நடந்து பாதி குணமான நிலையில் அவரை நான் சந்தித்தேன். எனக்குத் தெரிந்து அப்படி ஒரு விபத்திலிருந்து இவ்வளவு விரைவாக, முழுமையாக குணமானவர் உலகிலேயே இல்லை.

 

அவருடைய தன்னம்பிக்கை அவருக்கு வெற்றியை மட்டுமே கொடுக்கும். இயக்குநர் பாக்யராஜ் சார் இங்கு வந்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டு காலகட்டத்திற்குப் பிறகு அவர் விட்டுச் சென்ற இடமான குடும்பப் படங்களை நாங்கள் பிடித்துக்கொண்டோம். பிச்சைக்காரன் படத்தைப் பார்த்தபோது நாங்கள் செய்த அனைத்தையும் தாண்டிய படம் அது என்று தோன்றியது. சசி சாருக்கு என்னுடைய வாழ்த்தும் பாராட்டும். அனைத்து வயதினரும் ரசிக்கும்படியான படம் அது. படம் பார்த்துவிட்டு நேராக காரை எடுத்துக்கொண்டு விஜய் ஆண்டனியின் வீட்டுக்குச் சென்று என்னுடைய உணர்வுகளைக் கொட்டிவிட்டேன். அதன் இரண்டாம் பாகமான பிச்சைக்காரன்2 இன்னும் இரண்டு மடங்கு வெற்றியை அடையும் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எமனை ஜெயித்து வந்தவர் விஜய் ஆண்டனி. அவருக்காகப் பல வெற்றிகள் காத்திருக்கின்றன. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.