Skip to main content

“படத்தின் கிளைமாக்ஸ் பேசப்படும்” - ‘மழையில் நனைகிறேன்’ இயக்குநர் 

Published on 04/12/2024 | Edited on 04/12/2024
Mazaiyil Nanaigiren director said movie climax will be a talk of the town after release

ராஜ்ஸ்ரீ வென்ச்சர்ஸ் நிறுவன தயாரிப்பில் சுரேஷ் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மழையில் நனைகிறேன்’. அன்சன் பால், ரெபா ஜான், மேத்யூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசையமைத்துள்ளார். காதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த ஜூலையில் வெளியாகியுள்ளது. 

இப்படம் வருகிற 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இதனால் படக்குழு தற்போது புரொமோஷன் பணிகளை தொடங்கியுள்ளது. படம் குறித்து இயக்குநர் பேசுகையில், “படத்துக்கும் மழைக்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் தான் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தோம். படத்தின் கிளைமாக்ஸ் பேசப்படும்” என்றார். 

சார்ந்த செய்திகள்