Skip to main content

"கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன்" - குஷ்பு

Published on 17/08/2020 | Edited on 17/08/2020
chch

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல் நிலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை குஷ்பு எஸ்.பி.பி உடல்நலம் குறித்து வீடியோ பதிவிட்டுள்ளார். அதில்...

 

"எஸ்.பி.பி சார், என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் தினசரி வாழ்க்கையில் கூடவே இருக்கிறார். அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாது. ஏனென்றால், எப்படி தினமும் எழுந்து கடவுளைக் கும்பிடுகிறோமோ, அதே மாதிரி அவருடைய பாடல்களைக் கேட்காமல் யாராலும் இருக்க முடியாது. என்னாலும் இருக்கவே முடியாது. காலையில் எழுந்தவுடன் வேலை செய்யும் போது தூங்குவதற்கு முன்பு, பயணிக்கும் முன்பு என அவருடைய பாடல்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் அவர் தான் கடவுள் மாதிரி இருக்கிறார். என்னுடைய தொலைபேசியில் அவருடைய எண்ணை 'எஸ்.பி.பி தி காட்' என்று தான் பதிவு செய்து வைத்திருக்கிறேன். கடவுளுக்கு சமமாக அவரை நான் பார்க்கிறேன். என்னை மாதிரி அவருக்குக் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் திரும்ப வருவார் என காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

இப்போதைக்கு கோவிட் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவர் திரும்பி வந்துவிடுவார், வரணும். எங்களுக்காக திரும்ப வரவேண்டும், பாட்டுப் பாட வேண்டும். எங்களுடைய வாழ்க்கையில் இருக்க வேண்டும். நான் அவரை மறுபடியும் சந்தித்து பேச வேண்டும். அவருடைய குரலைக் கேட்க வேண்டும், கட்டிப்பிடிக்க வேண்டும். ஆகவே, எஸ்.பி.பி சார் உங்களுக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். வாங்க, திரும்பி வாங்க. நீங்கள் வருவீர்கள் ஏனென்றால் நீங்கள் வலுவானவர். உங்களை மாதிரி ஒரு சிறந்த மனிதரைப் பார்க்கவே முடியாது. உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. எங்களுக்காக திரும்ப வாருங்கள் எஸ்.பி.பி சார்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்