Published on 06/04/2018 | Edited on 07/04/2018
நிமிர் படத்தையடுத்து உதயநிதி ஸ்டாலின் தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே படத்தில் நடித்துள்ளார். நடிகை தமன்னா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இரும்புத்திரை பட இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கும் உதயநிதி அடுத்தாதாக அட்லியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய எனாக் இயக்கத்தில் ஒரு புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும், இந்துஜாவும் நடிக்க இருக்கிறார். மேலும் இப்படத்தில் உதயநிதிக்கு அப்பாவாக நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.