Skip to main content

புதுப் பட ஸ்கிரிப்டில் கமல்ஹாசன் பிஸி

Published on 21/12/2024 | Edited on 21/12/2024
kamalhaasan busy in new script

கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார்.  இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. முன்னதாக மகேஷ் நாராயணன், அ.வினோத், இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த நிலையில் அது கைவிடப்பட்டதாக தெரிகிறது. மேலும் பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல் நடிக்க ஓகே சொல்லியிருந்த நிலையில் அது குறித்து எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இப்படங்களைத் தவிர்த்து தெலுங்கில் கல்கி 2898 ஏ.டி. பார்ட் 2 படத்தை கைவசம் வைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.  

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கமல் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பரிவ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக இந்தாண்டு தொடக்கத்தில் தெரிவித்திருந்தார். மேலும் இப்படம் கமலின் 237வது படமாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எந்த அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் கமல் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் புது புகைப்படத்தை பகிர்ந்து, “குழந்தைகளின் க்ளவுஸுடன் எனது புதிய ஸ்கிரிப்ட்டை கையாண்டு வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். கமல் தற்போது ஏஐ தொழில்நுட்ப படிப்பிற்காக அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் கடைசியாக கதை எழுதி இயக்கிய படம் விஸ்வரூபம் 2 என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்