Skip to main content

ஹாட் ட்ரிக்; கிராமி விருது வாங்கிய இந்திய இசையமைப்பாளர்

Published on 06/02/2023 | Edited on 06/02/2023

 

Indian composer Rickey Kej wins third Grammy Award

 

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'கிராமி விருது' இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்து முடிந்துள்ளது. சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

 

இந்த விழாவில் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், மூன்றாவது முறையாக கிராமி விருதை வாங்கியுள்ளார். 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) என்ற பிரிவில் கிராமி விருது வென்றுள்ளார். இந்த விருதினை தி போலீஸ் என்ற பிரிட்டிஷ் ராக் இசைக் குழுவைச் சேர்ந்த ஸ்டூவர்ட் கோப்லேண்ட் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 

இது தொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட ரிக்கி கேஜ், "இந்த விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். ரிக்கி கேஜ், இதற்கு முன்னதாக 2015 மற்றும் 2022ல் சிறந்த புதிய ஆல்பம் (Best New Age Album category) என்ற பிரிவில் கிராமி விருது வாங்கியுள்ளார். மேலும்  நியூயார்க் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம் உட்பட 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த சாதனை உங்களின் கடின உழைப்பிற்கான சான்று” - பிரதமர் வாழ்த்து

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
pm modi congratulates shankar mahadevan team wins grammy award

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்று வரும் 'கிராமி விருது', இசையுலகில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது கிராமிய விருது விழாவில், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த அகையில் ஏ.ஆர் ரஹ்மான், அந்த இசைக்குழுவிற்கு எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் பிரதமர் மோடி சக்தி இசைக்குழுவிற்கு பாராட்டு கூறியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்த அவர், “இசையின் மீதான உங்களின் சிறப்பான திறமையும் அர்ப்பணிப்பும் உலக அளவில் அன்பை பெற்றுள்ளது. இந்தியா பெருமை கொள்கிறது. இந்த சாதனைகள் நீங்கள் உழைக்கும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். இது புதிய தலைமுறை கலைஞர்களை பெரிய கனவு காணவும் இசையில் சிறந்து விளங்கவும் தூண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கிராமி விருது வென்ற சங்கர் மகாதேவன் ஆல்பம்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Shankar Mahadevan shakthi This Moment album wins grammy award 2024

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'கிராமி விருது' இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். 

கடந்த வருடம் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) என்ற பிரிவில் கிராமி விருது வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.