Skip to main content

ஹர்பஜன் சிங், லாஸ்லியா இணைந்து நடித்துள்ள படத்தின் ட்ரைலர் வெளியீடு!

Published on 06/09/2021 | Edited on 06/09/2021

 

Friendship official Trailer

 

ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் ஹர்பஜன் சிங், சதீஸ், லாஸ்லியா, அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஃப்ரெண்ட்ஷிப்'. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்ததை அடுத்து, இந்தாண்டு கோடைவிடுமுறைக்குப் படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கான முன்னோட்டமாகப் படத்தின் டீசர் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருந்த நிலையில், கரோனா இரண்டாம் அலை காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

 

தற்போது இயல்புநிலை திரும்பிவருவதையடுத்து மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் மீண்டும் இறங்கியுள்ள படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 17ஆம் தேதி 'ஃப்ரெண்ட்ஷிப்' திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. தன்னுடைய ட்விட்டர் பக்கத்தின் வாயிலாகப் படத்தின் ட்ரைலரை வெளியிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்