Skip to main content

'இது தான் எங்க தலைவர்'....இடையில் வந்த படங்களை விமர்சிக்கும் ரஜினி ரசிகர்கள் !

Published on 28/12/2018 | Edited on 28/12/2018
petta

 

'பேட்ட' ட்ரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது. ஸ்டைலாக ஒரு கெட்டப்பிலும், அருவா மீசையுடன் கெத்தாக ஒரு கெட்டப்பிலும் ரஜினி அதிரடியாக தோன்றுகிறார். 'இனிமே தான் சிறப்பான தரமான சம்பவங்களை பார்க்க போறீங்க' என்று செம்மையான பஞ்ச் டயலாக்குடன் பழைய ரஜினி ஆக ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். ரஜினி மட்டுமின்றி விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சிம்ரன், திரிஷா, என பெரும் நட்சத்திர பட்டாளம் ட்ரைலரில் இருக்கிறது. ஆனாலும் சூப்பர் ஸ்டார் நான் தான் என சொல்லும்படி இருக்கிறது ரஜினிகாந்தின் தோற்றமும் நடிப்பும் சண்டைக் காட்சிகளும். ட்ரைலர் வெளியானதிலிருந்து மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் ரஜினி ரசிகர்கள் இன்னொரு கருத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

 

 

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு ரஜினி ரசிகர் என்பதால் அவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி முழுமையாக வெளிப்பட்டிருப்பதாகவும் கடந்த சில படங்களாக ரஜினியை சரியாக பயன்படுத்தவில்லை எனவும் கூறுகின்றனர். 'காலா' அதற்கு முன் 'கபாலி' என இரண்டு படங்களிலும் பல காட்சிகளில் ரஜினி அதிரடியாக இறங்குவார் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி பிறகு வேறுவிதமாக செல்லும்படி காட்சிகள் அமைந்திருந்தன. 2.0 படத்திலும் கூட ரஜினி ஒரு ரோபோவாக தோன்றுவதால் அது முழுமையான அதிரடியான ரஜினி இல்லை. இந்தப் படங்களுக்கு முன்பு வெளிவந்த 'லிங்கா' தோல்விப் படமானது. இப்படி சில பல வருடங்களாக அதிரடியான ஸ்டைலான ரஜினியை காணமுடியாமல் மிஸ் பண்ணிய ரஜினி ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் வண்ணம் இந்தப் படம் இருக்கும் என்பதை தெரிவிப்பதாக இருக்கிறது 'பேட்ட' ட்ரைலர். இப்படி 'பேட்ட' ட்ரைலர் தந்த உற்சாகத்தால் இதுதான் எங்க தலைவர் என்ற மகிழ்ச்சியுடன் மீண்டும் ஆக்டிவாக மாறி இருக்கின்றனர் ரஜினி ரசிகர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்