Skip to main content

ஜி.வி.பிரகாஷுடன் இணைகிறார் ராஜேஷ்?

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

rajesh

 

'சிவா மனசுல சக்தி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் இயக்குனர் ராஜேஷ். அவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் 'மிஸ்டர் லோக்கல்'. சிவகார்த்திகேயன் நடித்திருந்த இப்படம், வணிக ரீதியில் பின்னடைவைச் சந்தித்தது. இதனையடுத்து, நடிகர் ஜீவாவை வைத்துப் படம் இயக்கும் முயற்சியில், இயக்குனர் ராஜேஷ் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. நடிகர் ஜீவாவும், இயக்குனர் ராஜேஷ் கூறிய கதைக்குச் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவுப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்டது.

 

இந்த நிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷோடு இயக்குனர் ராஜேஷ் இணையவுள்ளதாகத் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன. நடிகர் ஜீவா, வேறு சில படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால், ஜி.வி.பிரகாஷிடம் கூறிய கதையை முதலில் படமாக்க ராஜேஷ் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படம், குடும்பப் பின்னணியும் ராஜேஷின் வழக்கமான நகைச்சுவை பாணியும் கலந்த படமாகத் தயாராவுள்ளது. மேலும், அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.  

 

இயக்குனர் ராஜேஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் கூட்டணியில் 'கடவுள் இருக்கான் குமாரு' என்ற திரைப்படம் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் முறையாக இணைந்த அதர்வா - அதிதி

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
atharvaa aditi shankar movie update

அதர்வா நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் மத்தகம் வெப் தொடர் வெளியானது. இதையடுத்து அதன் இரண்டாம் பாகம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது. இதனிடையே அட்ரஸ், தணல், நிறங்கள் மூன்று உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இப்போது நெல்சன் வெங்கடேசன் இயக்கும் 'டிஎன்ஏ' படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில், அதர்வா நடிக்கும் புதுப் பட அறிவிப்பு வெளியாகியுள்ளது. எம். ராஜேஷ் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். ஸ்ரீவாரி பிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்கும் இப்படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.

படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறும்போது, ​​“திரையுலகில் மிகுந்த அனுபவம் கொண்ட பி. ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் ஊக்குவிப்பதிலும் அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது" என்றார்.

இயக்குநர் எம். ராஜேஷ் கூறும்போது, ​​“காலத்திற்கு ஏற்றாற்போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன்" என்றார்.

Next Story

ராஜேஷ் இயக்கிய 'மை3' சீரிஸ் - ரிலீஸ் தேதி வெளியீடு

Published on 13/09/2023 | Edited on 13/09/2023

 

my 3 web series release date update

 

ஹன்ஷிகா மோத்வானி, முகேன் ராவ், சாந்தனு, ஜனனி, அஷ்னா ஜவேரி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள வெப் சீரிஸ் 'மை3'.  ராஜேஷ் எம் இயக்கியுள்ள இந்த சீரிஸ் ரொமான்டிக் காமெடி ஜானரில், ரோபோவின் காதலை நகைச்சுவையுடன் சொல்வதாக உருவாகியுள்ளது. இசைப் பணிகளை கணேசன் கவனிக்கிறார். ஹாட்ஸ்டாரில் இந்த சீரியஸ் வெளியாகிறது. 

 

கடந்த மாதம் இந்த சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் நேற்று ட்ரைலர் வெளியானது. ட்ரைலரில், முகேன் ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாகப் பாதிப்புக்குள்ளாகிவிடுவார். இளம் விஞ்ஞானியாக வரும் சாந்தனுவால் உருவாக்கப்பட்ட மை3 என்ற மனித உருவ ரோபோவை வாங்க ஆர்வமாக இருக்கிறார். ஆனால் உருவாக்கத்தின் போது ஏற்பட்ட சிக்கலில் செயலிழந்து போன மை3 ரோபோவிற்குப் பதிலாக சாந்தனுவின் உண்மையான முன்னாள் காதலி ஹன்சிகாவை அவரிடம் அனுப்புகிறார். முகேனை ஹன்சிகா சந்திக்கும் போது என்ன நடக்கிறது என்பது தான் இந்தக்கதை போல் தெரிகிறது. 

 

இந்நிலையில் இந்த சீரிஸின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. அதன்படி வருகிற 15 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.