Skip to main content

''மாஸ்டர் வித்தியாசமான தளபதி படமாக இருக்கும்'' -  'கைதி' தீனா ட்வீட்!

Published on 16/05/2020 | Edited on 16/05/2020

 

grwg

 


கரோனா வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திரையுலகமும் முடங்கியுள்ள நிலையில் திரைப்படங்களின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகு படங்களை வெளியிட படக்குழுவினர் வரிசைகட்டி காத்துக் கொண்டிருக்கும் நிலையில் 'விஜய்' நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' படம் அதில் முதல் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறது.


கடந்த ஏப்ரல் மாதமே வெளியாகவேண்டிய இப்படம் கரோனாவால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில்  இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விஜய் டிவி புகழ் நடிகர் தீனா ''மாஸ்டர் படத்தில் கார் துரத்தும் காட்சி'' என சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் தீனா மீண்டும் சமூகவலைத்தளத்தில் ''மாஸ்டர் வித்தியாசமான தளபதி படமாக இருக்கும்'' எனப் பதிவிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்