Skip to main content

‘சீயான் 60’ படத்தின் தற்போதைய நிலை என்ன? 

Published on 09/06/2021 | Edited on 09/06/2021

 

vsssgvd

 

நடிகர் விக்ரம், அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் விக்ரமும் அவரது மகன் த்ருவ் விக்ரமும் இணைந்து நடிக்கின்றனர். இப்படத்திற்கு தற்காலிகமாக 'சீயான் 60' எனப் பெயரிடப்பட்டுள்ளது. 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் மூலம் லலித்குமார் தயாரிக்கும் இப்படம், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

 

விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த ‘சீயான் 60’ படத்தின் படப்பிடிப்பு, கரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசியுள்ளார். அதில், “இதுவரை ‘சீயான் 60’ படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. கரோனா ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பிய பின் எஞ்சியுள்ள படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்படும்" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்