Skip to main content

சிம்புவின் 'பீப்' பாடல் விவகாரம்... வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்றம்

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

chennai high court dismissed simbu beep song case

 

கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்கள் குறித்து பாடிய பீப் பாடல் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த காலகட்டத்தில் பெண்கள் அமைப்புகள் ஒன்று திரண்டு சிம்புவுக்கு எதிராக போர்க்கொடித் தூக்கினர். இதனைத்தொடர்ந்து இப்பாடலை பாடிய சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரின் மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கோவை ரேஸ் கோர்ஸ் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
 

இதையடுத்து நடிகர் சிம்பு தனக்கு எதிராக தொடரப்பட்ட இந்த இரண்டு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தொடுத்திருந்தார். இந்த மனு மீதான விசாரணையில் கோவை நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் அறிக்கையின்படி  கோவை ரேஸ் கோர்ஸில்  பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

 

இந்நிலையில் இந்த வழக்கு  நீதிபதி சந்திரசேகர் முன்பு நேற்று (24.2.2022) விசாரணைக்கு வந்த போது, மத்திய குற்றப்பிரிவு போலீசார், நடிகர் சிம்பு மீது தவறான தகவலின் அடிப்படையில் வழக்கு பதியப்பட்டுள்ளதாக கூறி அறிக்கை தாக்கல் செய்தனா். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சிம்பு மீதான மற்றொரு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்