Skip to main content

“சூர்யா இருக்கும்போது சிகரெட் பிடிக்க மாட்டேன்” - காரணம் சொன்ன பாலா

Published on 19/12/2024 | Edited on 19/12/2024
bala about suriya in vanangaan audio launch

பாலா இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் ரோஷிணி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் வணங்கான். இப்படத்தில் சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பாலாவின் 25ஆம் ஆண்டு திரைப்பயணம், இரண்டு நிகழ்வும் ஒரே நிகழ்வாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வை ஒட்டி பாலாவிற்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி, த.வா.க. தலைவர் வேல்முருகன், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர். 

இதையடுத்து நிகழ்வில் நேரில் வருகை தந்து வசந்த பாலன், கருணாஸ், ஜீ.வி.பிரகாஷ், சீனு ராமசாமி, விஜயகுமார், மாரி செல்வராஜ், மன்சூர் அலிகான், சிங்கம் புலி, நா.த.க. ஒருங்கிணைப்பாளர் சீமான், மிஷ்கின், நித்திலன் சாமிநாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பாலாவை வாழ்த்தினர். மேலும் சூர்யா, சிவக்குமார், சிவகார்த்திகேயன் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்வில் தனது திரைப்பயணம் குறித்து நிறைய விஷயங்களை பகிர்ந்திருந்தார் பாலா. அதன் ஒரு பகுதியில், சூர்யா குறித்து பேசுகையில், “சூர்யா இருக்கும்போது நான் சிகரெட் பிடிக்க மாட்டேன். அதற்குக் காரணம் சிகரெட் பிடிக்கும் பொழுது அதை பார்க்கும் மற்றவர்கள் அட்வைஸ் தான் செய்வார்கள், ஆனால் சூர்யா மட்டும்தான் வருத்தப்படுவார். ஒரு நடிகரால் வருத்தப்பட முடியாது, ஆனால் தம்பியாக வருத்தப்பட முடியும்” என்றார். அதே சமயம் சூர்யா, “நான் நந்தா படத்தில் தான் முதன் முதலாக சிகரெட் பிடித்தேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்