
தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் மாளவிகா மோகனன் கடைசியாக ‘யுத்ரா’ என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழில் கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’, மலையாளத்தில் மோகன் லால் நடிக்கும் ‘ஹிருதயப்பூர்வம்’ மற்றும் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் ‘தி ராஜா சாப்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ‘தி ராஜா சாப்’ படம் மே 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. மற்ற படங்கள் படப்பிடிப்பில் இருக்கிறது.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் பிடித்த தமிழ் படம் என்னவென்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், “சமீபமாக வந்த படங்களில் 96 படம் பிடித்திருந்தது” எனப் பதிலளித்துள்ளார்.
பின்பு மற்றொரு ரசிகர், பிடித்த ஹாபி? எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த மாளவிகா மோகனன், “எனக்கு வைல்ட் லைஃப் போட்டோகிராபி(Wildlife photography) ரொம்ப பிடிக்கும். காட்டில் இருப்பது என்றால் எனக்கு சந்தோஷமாக இருக்கும்” என்றார்.