Skip to main content

அயலான் படத்தின் தடை நீக்கம்

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
ayalaan release update

ரவிக்குமார் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 2 வருடங்களுக்கும் மேலாகப் பணிகள் நடந்து தற்போது ரிலீஸூக்கு தயாராகியுள்ளது. 24 ஏ.எம். ஸ்டூடியோஸ் சார்பில் ஆர்.டி. ராஜா தயாரிப்பில் தொடங்கப்பட்ட இப்படத்தை கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வாங்கியது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு நாளை (12.01.2024) வெளியாகவுள்ளது. 

ad

கடந்த 2019ஆம் ஆண்டு கே.ஜே.ஆர். நிறுவனம் எம்.எஸ் சேலஞ்ச் என்ற விளம்பர நிறுவனத்திடம் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன் படி விளம்பர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.1.5 கோடியை தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை. இதையடுத்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளியான சமயத்தில் ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ரூ.1 கோடியை அயலான் பட வெளியீட்டிற்கு முன்பு வழங்குவதாக கே.ஜே.ஆர் நிறுவனம் உறுதி மொழி அளித்திருந்தது. 

ஆனால் மீதமுள்ள பணத்தை திருப்பி தராமல் அயலான் படத்தை கே.ஜே.ஆர் நிறுவனம் நாளை வெளியிடுவதால் படத்தை வெளியிட தடை கேட்டு எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அயலான் படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கே.ஜே.ஆர் நிறுவனம் மீதமுள்ள ரூ.1 கோடியில் ரூ.50 லட்சத்தை எம்.எஸ் சேலஞ்ச் நிறுவனத்திடம் செலுத்தியது. இன்னும் மீதமுள்ள ரூ.50 லட்சத்தை ஏப்ரல் மாதம் 10ஆம் தேதிக்குள் செலுத்த உத்தரவாதம் அளித்தது. இதையடுத்து அயலான் படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது. 
 

சார்ந்த செய்திகள்