உலகளவில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட பிரபல பாடகரான எட் ஷீரன், இந்தியாவில் ஆறு இடங்களில் இசைக் கச்சேரி நடத்த திட்டமிட்டிருக்கிறார். இதில் முதல் கச்சேரி புனேவில் கடந்த ஜனவரி 30ஆம் தேதி நடந்தது. பின்பு ஹைதராபாத்தில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி நடந்தது. இதையடுத்து சென்னையில் தற்போது நடந்து முடிந்துள்ளது.
சென்னையில் நந்தனம் பகுதியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். பிரம்மாண்டமாக நடந்த இந்த விழாவில் சர்ப்ரைஸ் விசிட்டாக ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். மேடையில் எட் ஷீரனும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்றாக காட்சியளிக்க விழா மேடையே கோலாகலமாக மாறியது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ‘ஊர்வசி ஊர்வசி’ பாடலை பாட உடனே எட் ஷீரனும் அவரது ‘ஷேப் ஆஃப் யூ’(Shape of you) பாடலை பாடினார். இருவரும் ஒரே நேரத்தில் மாறி மாறி பாடியதால் உற்சாக மிகுதியில் ரசிகர்கள் இருந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து எட் ஷீரன் அடுத்ததாக பெங்களூரு, ஷில்லாங் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் இசைக் கச்சேரி நடத்தவுள்ளார்.
Ed performing with @arrahman in Chennai 🇮🇳 pic.twitter.com/XF5To90IQR— Ed Sheeran HQ (@edsheeran) February 5, 2025