சர்கார் படத்திற்கு பிறகு விஜய் மற்றும் சிவகார்த்திகேயன் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் நடுவராக ஒரு சர்வதேச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடிகர்கள் சொந்த குரலில் பாடுவது குறித்து பேசியபோது.... "திரைப்படங்களில் தங்களுக்கான பாடல்களை நடிகர்களே பாடுவது உலகம் முழுக்கவே பொதுவாக நடைமுறையில் இருக்கும் ஒன்றுதான். நடிகர்கள் தங்கள் நடிப்பில் வெளியாகும் படத்திற்காக பாடும் பாடலைப் பதிவு செய்யும் முன் அவர்களுக்கு முறையான பயிற்சி அவசியம். அதற்காக அவர்கள் போதுமான நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இன்றைய நாட்களில் நடிகர்கள் மிகவும் பரபரப்பாக பிசியாக இருக்கிறார்கள். ஒப்பந்தமான பொறுப்புகளையே ஏமாற்றி தப்பிக்கும் நிலையில் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு தங்கள் பாடல்களைப் பாடுவதற்கு பயிற்சியெடுக்க நேரம் இல்லாத ஒரு இக்கட்டான சூழல்தான் அவர்களுக்கு உள்ளது. ஒருவேளை பயிற்சிக்குத் தேவையான நேரத்தை ஒதுக்க முடியும் என்று அதில் ஈடுபட்டால் அவர்களது படத்தில் அவர்களே பாடுவது என்பது மிகமிக அற்புதமான ஒரு யோசனையாக இருக்கும்‘’. இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்தார்.