Skip to main content

அமிதாப் பச்சன் கோரிக்கை ஏற்பு - தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு

Published on 25/11/2022 | Edited on 25/11/2022

 

Amitabh Bachchan’s voice cant be used without his permission Delhi HC

 

இந்திய சினிமாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகர்களில் ஒருவராகக் கருதப்படும் அமிதாப் பச்சன், 'ப்ராஜக்ட் கே' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

 

அந்த மனுவில், 'அனுமதி இன்றி சில விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் தனது பெயர் பயன்படுத்துவதாகவும், அதற்குத் தடை விதிக்க வேண்டும்' என்றும் கேட்டிருந்தார். இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி நவீன் சாவ்லா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமிதாப் பச்சன் தரப்பில் பேசிய வழக்கறிஞர், "அமிதாப் பச்சன் பெயரில் போலியான நிகழ்ச்சியில் லாட்டரி மோசடி நடக்கிறது. மேலும் அவரது புகைப்படங்களைப் பயன்படுத்தி துணிகள், சுவரொட்டிகள் தயாரிக்கின்றனர். இது சமீப காலமாகவே நடந்து வருகிறது. எனவே, அமிதாப் பச்சனின் பெயர், புகைப்படங்கள், குரல் ஆகியவற்றை முன் அனுமதி இன்றி வணிக நோக்கத்துடன் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும்" என்றார்.

 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அமிதாப் பச்சன் பெயர், புகைப்படம், குரல் ஆகியவற்றை முன் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத் தொடர்பு சேவை வழங்குநர்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தியா - பாகிஸ்தான் போட்டி; பலத்த பாதுகாப்பு - பங்கேற்கும் முக்கிய பிரபலங்கள்

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

india vs pakistan world cup match rajini amitab attending

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன. 

 

இந்தியாவை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை மறுநாளான 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ பிரம்மாண்டமாக இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

 

மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்தப் போட்டியைக் காண பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நேரில் சென்று கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். அதன்படி மூவரும் கலந்துகொள்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலிருந்து 11,000 பாதுகாவலர்கள் ஈடுபடவுள்ளனர். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடவுள்ளார். இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

 

 

Next Story

அமிதாப்பச்சனுக்கு எதிராக பரபரப்பு புகார்

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

CAIT filed a complaint against Amitabh Bachchan

 

திரைப்படங்களை தாண்டி பல விளம்பர படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சன், ஆன்லைன் வணிகத் தளமான ஃப்ளிப்கார்ட் நிறுவன விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஆண்டுதோறும் அந்த நிறுவனம் வழங்கும் சிறப்பு சலுகையான ‘பிக் பில்லியன் டே’ இந்தாண்டு வருகிற 8 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை விளம்பரப்படுத்தும் பொருட்டு அதன் விளம்பரப் படத்தில் நடித்த அமிதாப் பச்சன் நடித்த விளம்பரம், சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் "சில்லறை விற்பனைக் கடைகளில் இது போன்ற மொபைல்களுக்கான ஆஃபர்கள் கிடைக்காது" என்ற வசனத்தை பேசியிருந்தார். 

 

இந்த வசனம் நுகர்வோரை தவறாக வழி நடத்துவதாக சிஏஐடி பொதுச்செயலாளர் பிரவீன் கண்டேல்வால் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும் நாட்டின் சிறு சில்லறை விற்பனையாளர்களுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் அந்த விளம்பரத்தை திரும்பப் பெறவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஃப்ளிப்கார்ட் மீது அபராதம் விதிக்கப்படவும் அமிதாப் பச்சனுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளது.