Skip to main content

'தளபதி 66'... நோ சொன்ன மோகன், ஓகே சொன்ன பிரபலம்!

Published on 23/04/2022 | Edited on 23/04/2022

 

actor shaam joins vijay thalapathy66 film

 

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக தளபதி 66 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்து வருகிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட ஹைதராபாத்தில் நிறைவடைந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கவுள்ளது. 

 

இந்நிலையில் இப்படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிக்க ஷியாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு முதலில் 80 களில் பிரபலமான நடிகர் மைக் மோகனை அணுகியதாகவும், ஆனால் அவர் நடிக்க மறுத்ததால் ஷியாம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இப்படத்தின் படப்பிடிப்புகளை விரைந்து முடித்து தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்